இதுதொடர்பாகப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘’எந்த வித தயக்கமும் இன்றி நான் அறிவிக்கின்றேன். கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என்ற உறுதியான செய்தியை மீண்டும் சொல்கிறேன். மாண்புமிகு உறுப்பினர்கள் நம்முடைய செல்வப்பெருந்தகை அவர்கள், கோ.க. மணி அவர்கள், சிந்தனைச் செல்வன் அவர்கள், நாகை மாலி அவர்கள், ராமச்சந்திரன் அவர்கள், டாக்டர் சதன் திருமலைக்குமார் அவர்கள், பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள், ஈஸ்வரன் அவர்கள், வேல் முருகன் அவர்கள், அதைத்தொடர்ந்து நமது அவை முன்னவர் அவர்கள், அதேபோல் அவைத்தலைவர் அவர்கள், இங்கு தம்முடைய உணர்வுகளை எல்லாம் எடுத்துச்சொல்லி, நமது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய பெயரால், ஓர் பல்கலைக்கழகத்தினை உருவாக்க வேண்டும் என்று தங்கள் கருத்துகளை விதி எண் 55-ஐ பயன்படுத்தி, எடுத்துச்சொல்லியிருக்கிறார்கள்.

