Last Updated:
பஹல்காமின் தாக்குதலுக்கு பிறகு, சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு, அட்டாரி – வாகா சோதனைச் சாவடி மூடல் என்பது போன்ற முடிவுகள் இந்திய அரசால் எடுக்கப்பட்டது.
காஷ்மீரின் பஹல்காமில், பயங்கரவாதிகள் அப்பாவி பொதுமக்களை அவர்களின் மதம் குறித்து கேள்வி கேட்ட பிறகு கொன்றனர் என்றும், ஒரு இந்து ஒருபோதும் அத்தகைய செயலைச் செய்ய மாட்டார் என்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீரில் உள்ள பஹல்காமில் தீவிரவாத தாக்குதலால் 28 இந்திய சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், உலக தலைவர்களும் இந்தியாவிற்கு தங்கள் ஆறுதலை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியதாவது, “நாங்கள் இந்த தாக்குதலால் காயத்துடன் மட்டும் இல்லை. கோபமாகவும் உள்ளோம். நம்மிடம் ஏன் ராணுவம் உள்ளது?
1962ஆம் ஆண்டு போரில் அடைந்த படுதோல்விக்கு பிறகு நாம் பாடம் கற்றுக்கொண்டு விட்டோம். நீதியை நிலைநாட்ட ராவணனை வதம் செய்தது போல தற்போதும் சிலருக்கு பாடம் எடுக்க வேண்டும். பஹல்காமில் மதத்தை கேட்டு மக்களை கொலை செய்துள்ளனர். இந்துக்கள் அப்படி செய்யமாட்டார்கள்” என கூறியுள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு, இந்தியா – பாகிஸ்தான் எல்லையாக பஞ்சாபில் அமைந்துள்ள அட்டாரி – வாகா சோதனைச் சாவடி மூடல் என்பது போன்ற முடிவுகள் இந்திய அரசால் எடுக்கப்பட்டது. இதையடுத்து ஷிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ள பாகிஸ்தான், இந்தியாவின் செயலை போர் தொடுத்ததாகவே கருதுவோம் என கூறியுள்ளது. மேலும் இந்தியாவிற்காக வான்பரப்பு மூடப்படுவதாக தெரிவித்துள்ள பாகிஸ்தான், இந்தியாவுடனான வணிக நடவடிக்கைகளையும் நிறுத்தியுள்ளது.
Mumbai,Maharashtra
April 25, 2025 8:25 AM IST


