பஹல்காம் தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வெளியேறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பஹல்காமில் பயங்கரவாதிகளால் செவ்வாய்க்கிழமை 26 சுற்றுலாப் பயணிகள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் விளைவாக, பிரபல சுற்றுலாத் தலமாக விளங்கி வந்த பஹல்காம், தற்போது அச்சுறுத்தப்படும் பகுதியாக இருப்பதாக சுற்றுலாப் பயணிகள் ஆதங்கத்துடன் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், காஷ்மீரில் இருந்து 10,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வெளியேறி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, 4,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருப்பதாகவும் கூறுகின்றனர்.

