• Login
Wednesday, April 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

டெல்லிக்கு எதிரான போட்டியில் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்ததால் தோல்வி: லக்னோ கேப்டன் பந்த் | Lucknow captain Pant says they lost match against dc after scoring 20 runs less

GenevaTimes by GenevaTimes
April 24, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
டெல்லிக்கு எதிரான போட்டியில் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்ததால் தோல்வி: லக்னோ கேப்டன் பந்த் | Lucknow captain Pant says they lost match against dc after scoring 20 runs less
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லக்னோ: டெல்லி கேப்​பிடல்ஸ் அணிக்கு எதி​ரான போட்​டி​யில் 20 ரன்​கள் வரை குறை​வாக எடுத்​த​தால் தோல்வி கண்​டோம் என்று லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​யின் கேப்​டன் ரிஷப் பந்த் தெரி​வித்​தார்.

டெல்​லி, லக்னோ அணி​களுக்கு இடையி​லான ஐபிஎல் லீக் போட்டி நேற்று முன்​தினம் லக்னோ மைதானத்​தில் நடை​பெற்​றது. இதில் டெல்லி அணி 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் அபார வெற்​றியைப் பெற்​றது.

முதலில் விளை​யாடிய லக்னோ அணி 20 ஓவர்​களில் 6 விக்​கெட் இழப்​புக்கு 159 ரன்​கள் எடுத்​தது. எய்​டன் மார்​கிரம் 52, மிட்​செல் மார்ஷ் 45, ஆயுஷ் பதோனி 36, டேவிட் மில்​லர் 14, நிக்​கோலஸ் பூரன் 9, அப்​துல் சமத் 2 ரன்​கள் எடுத்​தனர்.

டெல்லி அணி தரப்​பில் முகேஷ் குமார் 4 விக்​கெட்​களைக் கைப்​பற்​றி​னார். மிட்​செல் ஸ்டார்க், சமீரா ஆகியோர் தலா ஒரு விக்​கெட்டை வீழ்த்​தினர்.

பின்​னர் 160 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் விளை​யாடிய டெல்லி அணி 17.5 ஓவர்​களில் 2 விக்​கெட் இழப்​புக்கு 161 ரன்​கள் குவித்து வெற்றி கண்​டது. அபிஷேக் போரல் 51, கருண் நாயர் 15 ரன்​கள் எடுத்து ஆட்​ட​மிழந்​தனர். கே.எல். ராகுல் 57, அக்​சர் படேல் 34 ரன்​கள் எடுத்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். ஆட்​ட​நாயக​னாக டெல்லி அணி​யின் முகேஷ் குமார் தேர்​வா​னார்.

இதன்​மூலம் டெல்லி அணி 8 போட்​டிகளில் விளை​யாடி 6 வெற்​றி, 2 தோல்வி​களு​டன் 12 புள்​ளி​களைப் பெற்று பட்​டியலில் 2-வது இடத்​துக்கு முன்​னேறி​யுள்​ளது. மாறாக லக்னோ அணி 9 போட்​டிகளில் விளை​யாடி 5 வெற்​றி, 4 தோல்வி​களு​டன் 10 புள்​ளி​களைப் பெற்று 6-ம் இடத்​தில் உள்​ளது.

இந்த ஆட்​டத்​தில் தோல்வி அடைந்​தது குறித்து லக்னோ அணி​யின் கேப்​டன் ரிஷப் பந்த் கூறிய​தாவது:

இந்த ஆட்​டத்​தில் நாங்​கள் 20 ரன்​கள் குறை​வாக எடுத்​தோம் என்று நினைக்​கிறேன். அதனால்​தான் தோல்வி கண்​டோம். முதல் 10 ஓவர் வரை எங்​களது ரன்​ரேட் அபார​மாக இருந்​தது. ஆனால் நடு ஓவர்​களில் டெல்லி அணி​யினர் சிறப்​பாக பந்​து​வீசி எங்​களைக் கட்​டுப்​படுத்தி விட்​டனர்.

இந்​தப் போட்​டி​யில் டாஸ் மிக​வும் முக்​கிய பங்கு வகித்​தது. லக்னோ ஆடு​கள​மானது, எப்​போதுமே 2-வ​தாக களம் இறங்​குபவர்​களுக்கு சாதக​மாக இருக்​கிறது. லக்னோ ஆடு​கள​மானது, முதலில் பேட்​டிங் செய்​யும் போது பந்​து​வீச்​சாளர்​களுக்கு சாதக​மாக​வும், 2-வது இன்​னிங்​சின் போது பேட்​ஸ்​மேன்​களுக்கு சாதக​மாக​வும் இருக்​கிறது.

இந்த ஆட்​டத்​தி​லும் அதே நிலை​தான் ஏற்​பட்​டது. இந்​தத் தோல்​வியி​லிருந்து நாங்​கள் பாடம் கற்​றுக்​கொள்ள வேண்​டும். இந்​தப் போட்​டி​யின்​போது நான் ஏழாவ​தாக களமிறங்​கியது ஏன் என்று கேள்வி கேட்​கின்​றனர். நான் 7-வது வரிசை​யில் விளை​யாடு​வதற்கு காரணம் இருக்​கிறது. அப்​துல் சமதை முன்​கூட்​டியே களம் இறக்க முடிவு செய்​தோம். அதன் பிறகு டேவிட் மில்​லர் வரவேண்​டிய நிலை ஏற்​பட்​டது. அதனால்​தான் 7-வது இடத்​தில் இறங்கி நான் விளை​யாடினேன். போட்​டியை வெல்​வதற்​குரிய எங்​கள் சிறந்த லெவனை கண்​டு​பிடிக்​க வேண்​டும்​. இவ்​வாறு ரிஷப்​ பந்​த்​ கூறி​னார்​.



Read More

Previous Post

காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த கேரளவாசியின் இதய நோயாளி மனைவியிடம் தகவல் சொல்லவில்லை! | Kerala resident killed in Kashmir attack

Next Post

உங்களுக்கு 40 வயதுக்கு மேல்  ஆகிறதா? நீங்கள் விரைவில் பணிநீக்கம் செய்யப்படலாம்.. எச்சரிக்கும் சிஇஓ! 

Next Post
உங்களுக்கு 40 வயதுக்கு மேல்  ஆகிறதா? நீங்கள் விரைவில் பணிநீக்கம் செய்யப்படலாம்.. எச்சரிக்கும் சிஇஓ! 

உங்களுக்கு 40 வயதுக்கு மேல்  ஆகிறதா? நீங்கள் விரைவில் பணிநீக்கம் செய்யப்படலாம்.. எச்சரிக்கும் சிஇஓ! 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin