• Login
Saturday, April 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஜாஸ் பட்லர் 54 பந்துகளில் 97 ரன்கள் விளாசல்: டெல்லியை வீழ்த்தி அசத்தியது குஜராத் | buttler knock helps gujarat titans to beat delhi capitals in match 35 of ipl 2025

GenevaTimes by GenevaTimes
April 20, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஜாஸ் பட்லர் 54 பந்துகளில் 97 ரன்கள் விளாசல்: டெல்லியை வீழ்த்தி அசத்தியது குஜராத் | buttler knock helps gujarat titans to beat delhi capitals in match 35 of ipl 2025
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அகமதாபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஜாஸ் பட்லரின் அதிரடி ஆட்டத்தால் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட் டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் அக்சர் படேல் 32 பந்துகளில், 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 39 ரன்களும் அஷுதோஷ் சர்மா 19 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 37 ரன்களும் விளாசினர்.

கருண் நாயர் 18 பந்துகளில், 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 28 ரன்களும், கே.எல்.ராகுல் 14 பந்துகளில், 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 28 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 21 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 31 ரன்களும், அபிஷேக் போரெல் 9 பந்துகளில், 18 ரன்களும் சேர்த்தனர். குஜராத் அணி சார்பில் பிரஷித் கிருஷ்ணா 4 ஓவர்களை வீசி 41ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். முகமது சிராஜ், அர்ஷத் கான், இஷாந்த் சர்மா, சாய் கிஷோர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

204 ரன்கள் இலக்குடன் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 19.2 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. ஜாஸ்பட்லர் 54 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 97 ரன்களும், ராகுல் டெவாட்டியா 3 பந்தில் 11 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக சாய் சுதர்சன் 21 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 36 ரன்களும், ஷுப்மன் கில் 7 ரன்களும், ஷெர்பேன் ரூதர்போர்டு 34 பந்துகளில், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 43 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர்.

ஜாஸ் பட்லர், சாய் சுதர்சனுடன் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 35 பந்துகளில் 60 ரன்களும், ஷெர்பேன் ரூதர்போர்டுடன் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 69 பந்துகளில் 119 ரன்களும் விளாசி பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார். விப்ராஜ் நிகாம் வீசிய 5-வது ஓவரில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட ஜாஸ் பட்லர், 9-வது ஓவரிலும் சிக்ஸர் விளாசினார். மிட்செல் ஸ்டார்க் வீசிய 15-வது ஓவரில் தொடர்ச்சியாக 5 பவுண்டரிகளை விரட்டி மிரளச் செய்தார் ஜாஸ் பட்லர்.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இது 5-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் அந்த அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. 7 ஆட்டங்களில் விளையாடி உள்ள குஜராத் டைட்டன்ஸ் 5 வெற்றி, 2 தோல்விகளை பதிவு செய்துள்ளது. அதேவேளையில் டெல்லி கேப்பிடல்ஸ் இந்த தோல்வியால் முதலிடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. அந்த அணி 7 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 2 தோல்விகளை பெற்றுள்ளது. இரு அணிகளும் 10 புள்ளிகளை பெற்றுள்ள போதிலும் நிகர ரன் ரேட் அடிப்படையில் குஜராத் முதலிடத்தில் உள்ளது. அந்த அணியின் நிகர ரன்ரேட் 0.984 ஆக உள்ளது. டெல்லி அணியின் நிகர ரன்ரேட் 0.589 ஆகும்.

200-ஐ துரத்துவது முதல் முறை… டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி 204 ரன்களை துரத்தி வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடர்களில் அந்த அணி வெற்றிகரமாக துரத்திய அதிகபட்ச ரன்கள் இதுவாகும். இதற்கு முன்னர் அந்த அணி 2023-ல் ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 198 ரன்களை துரத்தி வெற்றி பெற்றிருந்தது.

வாரிக்கொடுத்த ஸ்டார்க்… ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 ஓவர்களில் 11 யார்க்கர்கள் வீசி வெற்றி தேடிக்கொடுத்த மிட்செல் ஸ்டார்க் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3.2 ஓவர்களை வீசி விக்கெட் ஏதும் கைப்பற்றாத நிலையில் 49 ரன்களை தாரைவார்த்தார்.

கடைசி ஓவரில் சாய் கிஷோர்: டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரை குஜராத் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் வீசினார். அதற்கு முன்னர், அவர் பந்துவீச அழைக்கப்படவில்லை. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில்

முதல் இன்னிங்ஸில் கடைசி ஓவரில் முதன்முறையாக பந்து வீசிய சுழற்பந்து வீச்சாளர்களின் வரிசையில் சனத் ஜெயசூர்யா, ரோஹித் சர்மா ஆகியோருக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தை பிடித்துள்ளார் சாய் கிஷோர்.



Read More

Previous Post

இந்தி திணிப்புக்கு எதிராக இணையும் இரு துருவங்கள்..! மகாராஷ்டிரா அரசியலில் டிவிஸ்ட்..?

Next Post

Gold Rate : தங்கம் வாங்குவோருக்கு அதிர்ச்சி தரும் தகவல்.. விலை உயர்வு ஏற்பட வாய்ப்பு

Next Post
Gold Rate : தங்கம் வாங்குவோருக்கு அதிர்ச்சி தரும் தகவல்.. விலை உயர்வு ஏற்பட வாய்ப்பு

Gold Rate : தங்கம் வாங்குவோருக்கு அதிர்ச்சி தரும் தகவல்.. விலை உயர்வு ஏற்பட வாய்ப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin