ரூ. 16 லட்சம் சொத்து மதிப்பு கொண்ட உலகின் பணக்கார அரசியல் தலைவர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். மிகப்பெரும் நாட்டின் அதிபராக இருந்து வரும் இவருக்கு ஆண்டு சம்பளம் இந்திய மதிப்பில் ரூ. 1.15 கோடி என்று கூறப்படுகிறது. இருப்பினும் தனது அதிகாரத்தால் இவர், பல லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஏற்படுத்தியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அதிகாரப்பூர்வமாக இந்த அரசியல் தலைவருக்கு 800 சதுர அடியில் ஒரு அபாட்மென்ட், 3 கார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இவர் வாழும் வாழ்க்கையோ ஒரு சக்கரவர்த்திக்கு இணையாக இருப்பதை செய்திகளில் பார்க்க முடியும்.
உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புதின் தான் அந்த பணக்கார அரசியல் தலைவர். இவரது சொத்து மதிப்பு ரூ. 16 லட்சம் கோடி அளவு இருக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் மதிப்பிட்டுள்ளனர். புதின் ரஷ்யாவின் கருங்கடல் பகுதியில் தனக்கென பிரமாண்ட கோட்டையை கட்டி வருகிறார். இங்கு கிரேக்க கடவுள்களின் சிலைகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
ஒரு பளிங்கு நீச்சல் குளம், ஒரு ஆம்பிதியேட்டர், ஒரு மாநிலம் – கலை ஐஸ் ஹாக்கி வளையம், ஒரு வேகாஸ் பாணி கேசினோ, மற்றும் ஒரு இரவு விடுதி உள்ளிட்டவை இங்கு இடம்பெற்றுள்ளன.
புதினின் இந்த கருங்கடல் மாளிகைதான் கடந்த சில நாட்களாக சமூக வலை தளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்ட தலைப்புகளில் ஒன்றாக உள்ளது. இங்கு டைனிங் ஹால் மட்டுமே ரூ. 4 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் உலகின் சிறப்பு வாய்ந்த அத்தனை இன்டீரியர் பொருட்களும் புதினின் மாளிகையில் இடம்பெற்றுள்ளன. மேலும் 19 வீடுகள், 700 கார்கள், 58 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், பல கோடி மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவை புதினின் சொத்துப் பட்டியலில் அடங்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…