• Login
Wednesday, April 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பதைபதைக்க வைத்த துப்பாக்கிச் சூடு.. கூலாக ஸ்டார்பக்ஸ் காபி குடித்து வீடியோ எடுத்த நபர் – அமெரிக்காவில் பகீர் சம்பவம்!

GenevaTimes by GenevaTimes
April 18, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
பதைபதைக்க வைத்த துப்பாக்கிச் சூடு.. கூலாக ஸ்டார்பக்ஸ் காபி குடித்து வீடியோ எடுத்த நபர் – அமெரிக்காவில் பகீர் சம்பவம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலின் ரக் என்பவரால் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட அந்த வீடியோவில், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் தரையில் படுத்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. அதே இடத்தில் ஒருவர் கையில் காபியுடன் சர்வசாதாரணமாக நடந்து செல்வதும் பதிவாகியுள்ளது. இது இணையத்தில் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. சிலர், அந்தக் காப்பி அருந்தும் நபரை குறித்தும், சிலர் அரசையும் விமர்சித்துவருகின்றனர்.

அந்த வீடியோவின் கீழ் கருத்து பதிவு செய்த நபர் ஒருவர், “அமெரிக்காவில் ஒழுக்கநெறிகள் போய்விட்டன. துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர் கீழே இருக்க, ஒருவர் ஸ்டார்பக்ஸ் காபியை குடித்துப்படி அதனை வீடியோ பதிவு செய்து, எக்ஸ் தளத்தில் பதிவிடுகிறார்” என்று தெரிவித்துள்ளார். மற்றொருவர், “இந்த இதயமற்ற நபரை பொதுவெளியில் காட்டி, அவரை அவமானப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், ஒரு அமெரிக்க பத்திரிகையாளர், அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் மற்றும் சட்டத்தைக் குற்றம் சாட்டியுள்ளார். “அரசியல்வாதிகள் துப்பாக்கி வன்முறை குறித்து எதுவும் செய்வதில்லை” என அந்தப் பத்திரிகையாளர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். மேலும், இது உண்மை சம்பவமா என்றும் தனது சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, எக்ஸ் பயனர் ஒருவர், இந்த சம்பவம் உண்மையானது என்றும், புளோரிடா மாநில பல்கலைக்கழகம் துப்பாக்கி இல்லாத மண்டலமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிலில், “ஆம் இது உண்மையானது, நீங்கள் நடந்து சென்ற நபரைப் போலவே மோசமானவர்! புளோரிடா பல்கலைக்கழகம், துப்பாக்கி இல்லாத மண்டலம். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பெயர் பீனிக்ஸ் இக்னர். அவர் தனது அம்மாவிடமிருந்து துப்பாக்கியை எடுத்து வந்துள்ளார். இதனை எப்படி அரசியல்வாதியால் தடுக்க முடியும்? நடைமுறையில் உள்ள சட்டங்கள் எதுவாக இருந்தாலும் தீமை தீமையாகவே இருக்கும்!” எனத் தெரிவித்துள்ளார்.

The woman who was walked by and filmed by an individual who was sipping a Starbucks latte during a sh**ting at Florida State University appears to be alive.

Thank goodness.

Footage is going viral of a person sipping coffee as they filmed a victim of the FSU sh**ting.

According… pic.twitter.com/BwLr9HUG7S


— Collin Rugg (@CollinRugg) April 17, 2025

இந்த விவகாரம் குறித்து தகவல் தெரிவித்துள்ள அதிகாரிகள், புளோரிடா மாநில பல்கலைக்கழக வளாகில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 20 வயது பீனிக்ஸ் இக்னர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தனது தாயின் துப்பாக்கியைக் கொண்டுவந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : பீர் பாட்டிலால் கணவனை 36 இடங்களில் கிழித்து கொன்ற மனைவி.. காதலன் தந்த க்ளூ.. காவல்துறையை அதிரவைத்த வாக்குமூலம்!

அமெரிக்காவின் துப்பாக்கிச் சட்டங்கள் நீண்ட காலமாக தீவிர விவாதத்திற்கும் சர்ச்சைக்கும் உள்ளாகி வருகின்றன. பெரும்பாலும் நாட்டில் ஆழமாக வேரூன்றிய துப்பாக்கி கலாச்சாரம் மற்றும் குடிமக்களுக்கு ஆயுதம் ஏந்துவதற்கான உரிமையை வழங்கும் அமெரிக்க அரசியலமைப்பின் இரண்டாவது திருத்தம் பேசுபொருளாக உள்ளது.

குறிப்பாக, அரசியலமைப்பின் இரண்டாவது திருத்தம் தற்காப்பு மற்றும் பிற சட்டப் பயன்பாடுகளுக்காக துப்பாக்கிகளை வைத்திருக்கும் ஒரு நபரின் உரிமையை உத்தரவாதம் செய்கிறது என்பதை அமெரிக்க உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.

இந்தச் சட்டங்கள் தனிப்பட்ட சுதந்திரத்தையும் தற்காப்பையும் நிலைநிறுத்துகின்றன என்று ஆதரவாளர்கள் வாதிடுகையில், கடுமையான விதிமுறைகள் இல்லாதது வெகுஜன துப்பாக்கிச் சூடு, பள்ளித் தாக்குதல்கள் மற்றும் விபத்து மரணங்கள் உள்ளிட்ட துப்பாக்கி வன்முறையில் அதிகரிப்புக்கு வழிவகுத்ததாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

First Published :

April 18, 2025 6:57 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

பதைபதைக்க வைத்த துப்பாக்கிச் சூடு.. கூலாக ஸ்டார்பக்ஸ் காபி குடித்து வீடியோ எடுத்த நபர் – அமெரிக்காவில் பகீர் சம்பவம்!

Read More

Previous Post

Swimming : தமிழ்நாடு அரசின் இலவச நீச்சல் பயிற்சி… கனவை நிஜமாக்கும் வாய்ப்பு

Next Post

வெண்டிலேட்டர் சிகிச்சையில் அசைய முடியாமல் இருந்த பெண்.. பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர் | Makkal Osai

Next Post
வெண்டிலேட்டர் சிகிச்சையில் அசைய முடியாமல் இருந்த பெண்.. பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர் | Makkal Osai

வெண்டிலேட்டர் சிகிச்சையில் அசைய முடியாமல் இருந்த பெண்.. பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin