நாட்டின் மிக பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக இருக்கிறது எஸ்பிஐ (SBI) எனப்படும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா. இந்த வங்கியானது அதன் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு நிதி சார்ந்த பல சேவைகள் மற்றும் முதலீட்டு விருப்பங்களை வழங்குகிறது. 60 வயதிற்குட்பட்ட நபர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் வெவ்வேறு ஃபிக்ஸட் டெபாசிட் ஆப்ஷன்களையும் SBI வழங்குகிறது. இந்த FD திட்டங்களில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வருமானத்தை வழங்க வங்கி அவ்வப்போது அதன் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களை மாற்றுகிறது. அந்த வகையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெவ்வேறு முதிர்வு காலம் கொண்ட தனது FD திட்டங்களுக்கு வழங்கும் சமீபத்திய வட்டி விகிதங்களை இங்கே பார்க்கலாம்.
– 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான மெச்சூரிட்டி பீரியட் கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு, பொது மக்களுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 3.5 சதவீதமாகவும்,அதுவே மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 4 சதவீதமாகவும் வட்டி விகிதம் இருக்கிறது.
– 46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான மெச்சூரிட்டி பீரியட் கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு பொது மக்களுக்கு 4.75 சதவீத வட்டி விகிதமும், மூத்த குடிமக்களுக்கு 5.25 சதவீதமும் வட்டி விகிதமும் வழங்கப்படுகிறது.
– 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையிலான மெச்சூரிட்டி பீரியட் கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு பொது மக்களுக்கான வட்டி விகிதம் 5.75 சதவீதமாகவும், மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 6.25 சதவீதமாகவும் இருக்கிறது.
இதையும் படிங்க:
வங்கி கணக்கில் இப்படி ஒரு விஷயம் இருக்கு… தம்பதிகளுக்கு லாபம் தரும் கணக்கு!
– 211 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவான மெச்சூரிட்டி பீரியட் கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு, பொது மக்களுக்கு 6 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 6.5 சதவீதமும் வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன.
– 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கும் குறைவான மெச்சூரிட்டி பீரியட் கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் பொது மக்களுக்கு 6.8 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.3 சதவீதமும் வட்டி விகிதம் கிடைக்கும்.
– 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்கும் குறைவான மெச்சூரிட்டி பீரியட் கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட் தவணைகளுக்கு, பொது மக்களுக்கு 7 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீதமும் வட்டி விகிதங்களை எஸ்பிஐ வழங்குகிறது.
– 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகளுக்கு குறைவான மெச்சூரிட்டி பீரியட் கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட்களில் பொது மக்களுக்கு 6.75 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.25 சதவீதமும் வட்டி விகிதங்கள் வழங்கப்படுகிறது.
– 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு, சாதாரண மக்களுக்கு 6.5 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.
Follow @ WhatsApp :
வாட்ஸ் அப் -ல்
நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற
இங்கே
கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேற்கண்டவை தவிர பொது மக்களுக்கு 7.1 சதவீதம் வட்டியும் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.6 சதவீதம் வட்டியும் வழங்கும் “அம்ரித் கலாஷ்” என்ற 400 நாட்களுக்கான ஸ்பெஷல் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தையும் SBI வழங்குகிறது. நீங்கள் 5 ஆண்டுகள் மெச்சூரிட்டி பீரியட் கொண்ட FD-யில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 6.5 சதவீத வட்டி விகிதத்தில், நீங்கள் வட்டியாக ரூ.38,042 பெறுவீர்கள். 5 ஆண்டுகளுக்கு பிறகு உங்களுக்கு ரூ.1,38,042 கிடைக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…