பிராவிடண்ட் ஃபண்ட் (PF) மெம்பர் விவரங்களை திருத்துவதற்கு பயன்படுத்தக்கூடிய எம்ப்ளாயி பிராவிடண்ட் ஃபண்ட் (EPF) படிவம் என்பது கூட்டுப் பிரகடனப் படிவம் (Joint Declaration Form) எனப்படுகிறது. இந்த படிவத்தில் வேலை செய்பவர் மற்றும் முதலாளி ஆகிய இருவரும் கையெழுத்திட்டு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். பிராவிடண்ட் ஃபண்ட் விவரங்களில் நிரப்பப்பட்ட 11 அளவுருக்களில் ஏதேனும் மாற்றங்கள் தேவைப்பட்டால் நீங்கள் இந்த ஜாயிண்ட் டிக்ளரேஷன் படிவத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
உங்களுடைய EPF அக்கவுண்டில் பெயர், முகவரி அல்லது பிற விவரங்களில் நீங்கள் மாற்றங்களை செய்ய நினைத்தால் ஆன்லைனில் உள்ள ஜாயிண்ட் டிக்ளரேஷன் படிவத்தை நிரப்பலாம். தேவையான மாற்றங்களை செய்வதற்கு இந்த படிவத்தை சம்பந்தப்பட்ட பணியாளர் மற்றும் முதலாளி ஆகிய இருவரும் கையெழுத்திட வேண்டும் என்பதால் இது ‘கூட்டு’ படிவம் என்று அழைக்கப்படுகிறது.
ஜாயிண்ட் டிக்ளரேஷன் படிவம் மூலமாக என்னென்ன மாற்றங்களை உங்களால் செய்ய இயலும்?
பெயர், பாலினம், பிறந்த தேதி, தந்தை பெயர், தாயின் பெயர், பணிக்கு சேர்ந்த தேதி, பணியிலிருந்து விலகிய தேதி, பணியில் இருந்து விலகியதற்கான காரணம், ஆதார் நம்பர் உள்ளிட்ட 11 விவரங்களை உங்களால் மாற்ற இயலும்.
ஜாயிண்ட் டிக்ளரேஷன் படிவத்தை நிரப்புவதற்கான படிகள்:
பின்வரும் EPFO வெப்சைட்டை பார்வையிடவும்: epfoindia.gov.in. அதில் ‘Services’ பிரிவிற்கு செல்லவும். கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஷன்களை கீழே ஸ்க்ரோல் செய்து பார்க்கும் பொழுது காணப்படும் ‘For Employees’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
இந்த ஆப்ஷனை நீங்கள் கிளிக் செய்தவுடன் புதிய வெப்பேஜ் திறக்கப்படும்:
https://www.epfindia.gov.in/site_en/For_Employees.php
இந்த வெப்பேஜில் ‘Services’ பிரிவுக்கு சென்று இரண்டாவது ஆப்ஷனை தேர்வு செய்யவும்: Member UAN/ online Service.
இதையும் படிங்க:
பர்சனல் லோன் வாங்க விருப்பமா? – எப்படி விண்ணப்பிப்பது… ஸ்டெப் பை ஸ்டெப் கைடு!
இந்த ஆப்ஷனை நீங்கள் தேர்வு செய்த பிறகு மீண்டும் ஒரு புதிய வெப்பேஜ் திறக்கப்படும். சேவைகளை அணுகுவதற்கு ஒருவர் UAN, பாஸ்வேர்டு மற்றும் கேப்சா போன்றவற்றை என்டர் செய்ய வேண்டும்
இப்பொழுது மேலே இருக்கக்கூடிய ‘Manage’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். ட்ராப் டவுன் ஆப்ஷனை தேர்வு செய்த பிறகு, ‘joint declaration’ என்ற ஆப்ஷனை காண்பீர்கள். இப்போது விவரங்களை திருத்துவதற்கு மெம்பர் ID ஐ உள்ளிடவும்.
மாற்றங்களை செய்வதற்கு நீங்கள் இங்கு தேவையான டாக்குமென்ட்களை அப்லோடு செய்ய வேண்டும். கோரிக்கையை நீங்கள் சமர்ப்பித்த பிறகு அது எம்ப்ளாயர் லாகினில் பிரதிபலிக்கப்படும். எம்ப்ளாயரின் பதிவு செய்யப்பட்ட இமெயில் IDக்கு இது குறித்த ஒரு இமெயில் அனுப்பப்படும்.
Follow @ WhatsApp :
வாட்ஸ் அப் -ல்
நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற
இங்கே
கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தற்போதைய எம்ப்ளாயரால் மட்டுமே பணியாளர்களின் இந்த விபரங்களை மாற்ற இயலும். நீங்கள் செய்யக்கூடிய எந்த ஒரு மிகப்பெரிய அல்லது சிறிய மாற்றத்திற்கும் ஆதரவு அளிக்கக் கூடிய வகையில் டாக்குமெண்ட்களை வழங்குவது கட்டாயம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…