ஏப்ரல், மே மாதங்களில் இயல்பை விட அதிக வெப்பநிலை எதிர்பார்க்கப்படுவதாகவும், வெப்ப அலை வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
ஒரு பகுதியின் இயல்பு வெப்பநிலையை விட 4.5 டிகிரி செல்சியஸ் அதிகமாகவோ அல்லது அதிகப்பட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் ஆக இரண்டு நாட்கள் தொடர்ந்து இரண்டு வானிலை ஆய்வு மையங்களில் பதிவானால் அது ‘வெப்ப அலை’ என இந்திய வானிலை ஆய்வு மையம் வரையறுத்துள்ளது. அந்த வகையில் அடுத்த மாதம் முதல் கோடை காலம் தொடங்கும் நிலையில், ஏப்ரல், மே மாதங்களில் இயல்பை விட அதிக வெப்பநிலை எதிர்பார்க்கப்படுவதாகவும், வெப்ப அலை வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி நரேஷ் குமார், சில நாட்களில் டெல்லியில் மிக லேசான மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.
கோடை காலம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த நரேஷ் குமார், “அதனை இப்போதே கூறுவது கடினம். ஆனால், வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெப்ப அலை வீசக்கூடும். ஏப்ரல் மாதத்தில், நாட்டின் மத்திய பகுதியில் வெப்ப அலை வீசக்கூடும். அந்த வெப்ப அலை அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்கு நாட்டின் மையப் பகுதியில் நீடிக்கலாம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க : கோடை வெய்யில்…தோல் தொற்று நோயை தடுக்க இதை செய்யுங்கள்
அடுத்த இரண்டு நாட்களுக்கு மத்தியப் பிரதேசத்தில் வெப்ப அலைகள் இருக்கும். குறிப்பாக மத்திய இந்தியாவில் வறண்ட வானிலை நிலவும். கர்நாடகாவின் சில பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களில் வெப்ப அலைகள் நிலவும்” என அவர் தெரிவித்தார். மேலும் அடுத்த நான்கைந்து நாட்களில் கேரளா, தமிழ்நாடு, கடலோர ஒடிசா மற்றும் ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காணப்படும் என நரேஷ் குமார் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…