• Login
Monday, April 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025 : வெற்றிப் பாதைக்கு திரும்பிய சி.எஸ்.கே. – 5 விக். வித்தியாசத்தில் லக்னோவை வென்றது

GenevaTimes by GenevaTimes
April 14, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL 2025 : வெற்றிப் பாதைக்கு திரும்பிய சி.எஸ்.கே. – 5 விக். வித்தியாசத்தில் லக்னோவை வென்றது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 14, 2025 11:42 PM IST

ஷிவம் துபே – தோனி இணை அதிரடியாக ரன்களை எடுத்து அணியை வெற்றி பெற வைத்தது.

ஷிவம் துபே - தோனிஷிவம் துபே - தோனி
ஷிவம் துபே – தோனி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

லக்னோவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக எய்டன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ் களம் இறங்கினர்.

மார்க்ரம் 6 ரன்னில் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து நிகோலஸ் பூரன் 8 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து இணைந்த மார்ஷ் – ரிஷப் பந்த் இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

மார்ஷ் 30 ரன்கள் எடுத்திருந்தபோது ரவிந்திர ஜடேஜா சுழலில் போல்டாகி வெளியேறினார். ஆயுஷ் பதோனி 22 ரன்களும், அப்துல் சமத் 20 ரன்களும் எடுத்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பந்த் 49 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினார்.

20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 7 விக்கெட் இழப்புக்கு166 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.

இன்றைய போட்டியில் அறிமுகமான சென்னை அணியின் ஷேக் ரஷீத் 19 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 27 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார். ராகுல் திரிபாதி 9 ரன்களும், ரவிந்திர ஜடேஜா 7 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பொறுப்புடன் விளையாடிய ரச்சின் ரவிந்திரா 22 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க – IPL 2025 | ஹர்திக் பாண்டியாவின் பேட்டை அம்பயர் சோதனை செய்தது ஏன்? – காரணம் என்ன?

பின்னர் இணைந்த ஷிவம் துபே – தோனி இணை அதிரடியாக ரன்களை எடுத்து அணியை வெற்றி பெற வைத்தது. 19.3 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. துபே 43 ரன்களுடனும், தோனி 26 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

கடந்த 5 போட்டிகளில் தோல்வியடைந்திருந்த சென்னை அணி இன்று வெற்றிப் பாதைக்கு திரும்பியிருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

First Published :

April 14, 2025 11:42 PM IST

Read More

Previous Post

’பொன்முடியின் கட்சி பதவியை நீக்கி என்ன பிரயோஜனம்! யார் காதுல பூ சுத்துரிங்க!’ ஸ்டாலினை விளாசிய பத்திரிக்கையாளர் மணி!

Next Post

ரவூப் நாடாளுமன்ற உறுப்பினர் சௌ யூ ஹுய் கைது | Makkal Osai

Next Post
ரவூப் நாடாளுமன்ற உறுப்பினர் சௌ யூ ஹுய் கைது | Makkal Osai

ரவூப் நாடாளுமன்ற உறுப்பினர் சௌ யூ ஹுய் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin