Last Updated:
பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க எஞ்சியுள்ள 8 போட்டிகளில் 7 ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும்
தொடர் தோல்வியில் இருந்து மீண்டு எழுமா என்ற ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் லக்னோ அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று எதிர்கொள்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 30வது லீக் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் தொடங்குகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ அணி இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 4 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளது.
சொந்த மண்ணில் குஜராத் அணியை வீழ்த்திய கையோடு லக்னோ அணி களம் காண்கிறது. அதேநேரம், 5 முறை சாம்பியனான சென்னை அணி, நடப்பு சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.
முதல் ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்திய சென்னை அணி, அதன்பிறகு தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது.
பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க எஞ்சியுள்ள 8 போட்டிகளில் 7 ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற சூழலில், தவறுகளை களைந்து சென்னை அணி எழுச்சி பெற முயற்சிக்கும். அதேநேரம், சொந்த மண்ணில் லக்னோ அணியை வீழ்த்துவது சென்னைக்கு சவாலாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கவலையளிக்கும் பேட்டிங்
பவுலிங்கில் சென்னை அணி எதிரணிகளை ஓரளவு கட்டுப்படுத்தினாலும் பேட்டிங் மிகவும் பலவீனமாக உள்ளது. சென்னை அணியில் எந்தவொரு பேட்ஸ்மேனும் இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. தொடக்க வீரர்கள் கான்வே, ரச்சின் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இருப்பினும் அவர்களால் அணிக்கு நல்ல தொடக்கத்தை அளிக்க முடியவில்லை.
பேட்டிங்கில் திறமையாக விளையாடக்கூடிய ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார். ஷிவம் துபே, தீபக் ஹூடா, திரிபாதி உள்ளிட்ட வீரர்களும் ரன்கள் குவிக்க திணறி வருகின்றனர். கொல்கத்தா அணிக்கு எதிரான மேட்ச்சில் சென்னை அணி 20 ஓவர்கள் விளையாடி 103 ரன்கள் மட்டுமே எடுத்தது கவனிக்கத்தக்கது.
April 14, 2025 3:32 PM IST


