Last Updated:
Karnataka’s Caste Census Report | கர்நாடகாவில் 2015ல் நடந்த சாதிவாரி கணக்கெடுப்பில் 2 லட்சம் பேர் தங்களது சாதிப் பெயரே தெரியாது என்று கூறியுள்ளனர். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை 51% உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.
கர்நாடகாவில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பில் சுமார் இரண்டு லட்சம் பேர் தங்களது சாதிப் பெயரே தெரியாது என்று கூறியுள்ளனர்.
கர்நாடகாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு சித்தராமையா முதலமைச்சராக இருந்தபோது சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. கிடப்பில் போடப்பட்டிருந்த அந்த அறிக்கைக்கு மாநில அமைச்சரவை கூட்டத்தில் அண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த சாதி வாரி கணக்கெடுப்பில் இடம்பெற்ற முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, சாதிவாரி கணக்கெடுப்பின் போது 2 லட்சத்து 53 ஆயிரம் பேர் தங்களது சாதியை தெரிவிக்க மறுத்திருப்பது தெரியவந்துள்ளது.
ஒரு லட்சத்து 34 ஆயிரம் பேர் தங்களுக்கு சாதியே கிடையாது என்று கூறியிருக்கும் நிலையில், ஒரு லட்சத்து 94 ஆயிரம் பேர் தங்களுடைய சாதிப் பெயரே தெரியாது என்று தெரிவித்துள்ளனர். அதேநேரம் 3 ஆயிரத்து 755 பேர் கூறிய சாதிப் பெயர்கள் அரசின் பட்டியலிலேயே இல்லாததும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை 51 விழுக்காடாக உயர்த்த கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை மீது அரசு அவசரமாக முடிவு எடுக்காது என துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார்.
April 14, 2025 1:41 PM IST
2 லட்சம் பேருக்கு சாதி பெயரே தெரியாது : கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பில் தெரியவந்த ஷாக் தகவல்


