தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, புதுதில்லியில் ‘இந்தியா’ கூட்டணியின் மாபெரும் பேரணி இன்று(மார்ச். 31) காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தில்லியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.