• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பிருத்வி ஷா இல்லை.. சிஎஸ்கேவில் ருதுராஜ் கெய்க்வாடுக்கு பதில் இந்த வீரர் தான்! – எப்போது இணைவார்?

GenevaTimes by GenevaTimes
April 14, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
பிருத்வி ஷா இல்லை.. சிஎஸ்கேவில் ருதுராஜ் கெய்க்வாடுக்கு பதில் இந்த வீரர் தான்! – எப்போது இணைவார்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 6 போட்டிகளில் 5 போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்துள்ளது. இந்த நிலையில் சென்னை ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இந்த நிலையில், சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முழங்கை எலும்பு முறிவு காரணமாக நடப்பு தொடரிலிருந்து விலகினார். இதனால் சென்னை அணிக்கு மீண்டும் கேப்டனாகினார் எம்.எஸ்.தோனி. தொடர்ந்து ருதுராஜ் கெய்க்வாடுக்கு மாற்றாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றொரு பேட்ஸ்மேனை தேர்வு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ருதுராஜ் கெய்க்வாடுக்கு மாற்றாக, மொத்தம் 3 பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் தகவல் வெளியானது. அதன்படி, பிருத்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகிய சீனியர் வீரர்கள் பெயர்கள் முன்னணியில் இருந்தன. மும்பையைச் சேர்ந்த 25 வயதான பிரித்வி ஷா, 2018 முதல் 2024 வரை டெல்லி கேபிடல்ஸ் அணியில் விளையாடினார். இதுவரை விளையாடிய 79 IPL போட்டிகளில், அவர் 1892 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால், ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் பிருத்வி ஷாவை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. இதற்கு அவரின் உடற்தகுதி உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன.

அதேபோல், மயங்க் அகர்வால், ஐபிஎல் தொடரில் ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்காக விளையாடியுள்ளார். 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டனாகவும் இருந்தார்.

ஆனால், இந்த இருவரை தாண்டி மூன்றாவது நபர் 17 வயது இளம் வீரரை அணியில் சேர்த்துள்ளது சிஎஸ்கே நிர்வாகம். அவர் பெயர் ஆயுஷ் மத்ரே. மும்பையைச் சேர்ந்த ஆயுஷ் மத்ரே சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் அழைக்கப்பட்டார். அதன்படி, தற்போது அவரையே ருதுராஜ் கெய்க்வாடுக்கு மாற்றாக அணியில் இணைத்துள்ளது சிஎஸ்கே நிர்வாகம்.

Ayush Mhatre

“அவர் ஓரிரு நாட்களில் தோனி தலைமையிலான அணியில் இணைவார்” என்று சிஎஸ்கே நிர்வாகத்திற்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார். ரூ. 30 லட்சத்திற்கு அடிப்படை விலையாக இருந்த ஆயுஷ் மத்ரே, ஐபிஎல் ஏலத்தில் யாராலும் வாங்கப்படவில்லை. இந்தநிலையில், அவரை தேடி மீண்டும் வாய்ப்பு வந்துள்ளது. 20ம் தேதி நடக்கும் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தோனி தலைமையில் ஆயுஷ் மத்ரே இணைவார் என்று சொல்லப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தான் உள்நாட்டுப் போட்டிகளில் அறிமுகமான ஆயுஷ் மத்ரே, ஒன்பது முதல் தரப் போட்டிகளிலும் ஏழு லிஸ்ட் ஏ போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு சதங்களையும், 50 ஓவர் கிரிக்கெட்டில் இரண்டு சதங்களையும் அடித்துள்ளார். மும்பை அணிக்காக தனது கடைசி லிஸ்ட் ஏ போட்டியில், டீனேஜர் சவுராஷ்டிரா அணிக்கு எதிராக 148 ரன்கள் எடுத்தார். ஆல் ரவுண்டராக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய இவரை ருதுராஜ் கெய்க்வாடுக்கு மாற்றாக சிஎஸ்கே நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

April 14, 2025 8:44 AM IST

தமிழ் செய்திகள்/விளையாட்டு/IPL/

பிருத்வி ஷா, மயங்க் அகர்வால் இல்லை.. சிஎஸ்கேவில் ருதுராஜ் கெய்க்வாடுக்கு பதில் இந்த வீரர் தான்! – எப்போது இணைவார்?

Read More

Previous Post

மத்திய அரசின் புதிய சட்டத் திருத்தத்தால் உ.பி.யில் வக்பு சொத்துகளை பதிவு செய்வதில் சிக்கல் | union government amendment creates problem in registering Waqf properties in UP

Next Post

Gold Rate | தமிழ் புத்தாண்டு நாளில் குறைந்த தங்கம் விலை..! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா?

Next Post
Gold Rate | தமிழ் புத்தாண்டு நாளில் குறைந்த தங்கம் விலை..! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா?

Gold Rate | தமிழ் புத்தாண்டு நாளில் குறைந்த தங்கம் விலை..! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin