ரூ. 24.75 கோடிக்கு வாங்கப்பட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பவுலர் மிட்செல் ஸ்டார்க்கின் ஆட்டம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. ஐபிஎல் ஏலத்தின் போது ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா அணி நிர்வாகம் ரூ.24.75 கோடிக்கு விலைக்கு வாங்கியது.
முன்னதாக அவரை தங்களது அணியில் எடுப்பதற்கு ஐபிஎல் அணிகள் கடுமையாக போட்டியிட்டன. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கியுள்ள சூழலில் மிட்செல் ஸ்டார்க்கின் பந்துவீச்சு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
கடைசி ஓவர் கடைசி பந்து வரை சென்ற இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு சூப்பர் திரில்லராக நல்ல அனுபவத்தை கொடுத்தது. இந்த மேட்சில் மிட்செல் ஸ்டார்க் 4 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 53 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதேபோன்று நேற்று பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியிலும் 4 ஓவர்கள் வீசிய மிட்செல் ஸ்டார்க் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 47 ரன்களை எதிரணிக்கு அள்ளிக் கொடுத்தார்.
ஒட்டு மொத்தமாக 2 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 8 ஓவர்கள் வீசி 100 ரன்கள் கொடுத்துள்ளார். அதாவது மிச்சல் ஸ்டார்க்கை வைத்து கடந்த 2 போட்டிகளில் கொல்கத்தா அணிக்கு துளி அளவும் பலன் ஏற்படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் கொல்கத்தா அணியின் ரசிகர்கள் நிர்வாகத்தின் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இருப்பினும் மோசமாக விளையாடிய பல வீரர்களுக்கு கொல்கத்தா அணி அடுத்தடுத்து வாய்ப்புகளை அளித்த நிலையில், மிட்செல் ஸ்டார்க் நல்ல ஃபார்முக்கு திரும்பும் வரை அவருக்கு அணி நிர்வாகம் ஆதரவு அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த சூழலில் அடுத்த மாதம் 3-ஆம் தேதி நடைபெற உள்ள ஆட்டத்தில் கொல்கத்தா அணி டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது. இதற்கிடையே இப்படி ரன்களை அள்ளிக் கொடுப்பவருக்கா ரூ. 24.75 கோடி வழங்கப்பட்டது என்று கொல்கத்தா அணி என்ற ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…