தோனிக்கும் ஜடேஜாவுக்கும் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. முரண்பாடு இருப்பதாக மீடியாக்கள் தான் அதிகமாக செய்திகளை வெளியிட்டு வந்தன.
ஐபிஎல் தொடரில் 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சிஎஸ்கே அணி சாதனை படைத்தது. இந்த இறுதிப்போட்டியுடன் சென்னை அணியின் நட்சத்திர வீரர் அம்பாதி ராயுடு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
தற்போது ஆந்திர மாநில அரசியலில் களமிறங்க ராயுடு தீவிரமாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் பற்றி ராயுடு கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், தோனிக்கும் ஜடேஜாவுக்கும் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. முரண்பாடு இருப்பதாக மீடியாக்கள் தான் அதிகமாக செய்திகளை வெளியிட்டு வந்தன.
ஜடேஜா கேப்டன்சியில் இருந்து விலகியதற்கு, அவரின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாததே காரணம். ஏனென்றால் 2022 சீசனில் ஜடேஜாவுக்கு கேப்டன்சியால் சிறிய அழுத்தம் அதிகமானது என்று தெரிவித்தார்.
அஸ்வினுக்கு உடல் அளவில் குறை.. ஆனால் அவர் எப்படி சமாளிக்கிறார் தெரியுமா?
அதேபோல், 42 வயதாகினாலும் தோனி தான் ஓய்வுபெறுவது பற்றி முடிவெடுக்க வேண்டும். அவர் நினைக்கும் வரை சிஎஸ்கே அணியில் விளையாடலாம்.
தோனி உடல்தகுதி இருக்கும் வரை ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எப்படியிருந்தாலும் ஐபிஎல் ஏலத்தின் போது தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா மாட்டாரா என்பது தெரிய வரும் என்று தெரிவித்துள்ளார்.
பின்னர் சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் பற்றிய கேள்விக்கு, ருதுராஜ் கெய்க்வாட்டை தயார்ப்படுத்தும் பணியை தோனி ஏற்கனவே தொடங்கிவிட்டார்.
இளம் வயதிலேயே சிஎஸ்கேவின் முக்கிய பேட்ஸ்மேனாக ருதுராஜ் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதேபோல் அணி நிர்வாகம் என்ன நினைக்கிறது என்பதையும் எளிதாக புரிந்துகொள்ளும் வீரராக உள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணினாலே போதும்.. அஸ்வினின் தெறிக்கும் ரெக்கார்ட்ஸ்!
அதுமட்டுமல்லாமல் 26 வயது மட்டுமே ருதுராஜ் கெய்வாட்டிற்கு ஆகுவதால், குறைந்தது 10 ஆண்டுகளுக்கு சிஎஸ்கே அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைக்கும்.
ஒரு அணியை சிறப்பாக ஒருங்கிணைத்து வழிநடத்தும் திறமையும், அறிவும் ருதுராஜ் கெய்க்வாடுக்கு உள்ளது. அதனால் நிச்சயம் அடுத்த கேப்டனாக ருதுராஜ் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சிஎஸ்கே நிர்வாகமும், பயிற்சியாளர் பிளெமிங்கும் ஆதரவாக இருப்பார்கள்.
அதேபோல் என்னை பொறுத்தவரை ருதுராஜ் கெய்க்வாடின் திறமையை இந்திய அணி பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்தியாவின் 3 வகையான கிரிக்கெட் அணிக்கும் ஆடும் திறமையோடு ருதுராஜ் கெய்க்வாட் உள்ளார்.
அதனால் 3 அணிகளிலும் ருதுராஜ் கெய்க்வாட் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.