Last Updated:
இதன் மூலம் சுமார் 3 லட்ச ரூபாய் அளவுக்கு மோசடி நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவ்வை சண்முகி படத்தில் வரும் இந்த காட்சிகள் போல, 100 நாள் வேலைக்காக ஆண்கள் சிலர் பெண்கள் போல மாறி மோசடி செய்த சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் எனும் 100 நாள் வேலைத் திட்டம் இந்தியாவில் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை என்பது உறுதி செய்யப்படுகிறது.
இதில், மாநிலங்களுக்கு மாநிலம் ஊதிய உயர்வு வேறுபடுகிறது. இந்நிலையில் கர்நாடகாவின் யாதகிர் மாவட்டத்தில் இந்த 100 நாள் வேலை திட்டத்தில் சிலர் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. பெண்களும் வேலைக்கு வந்திருப்பது போலக் காட்டி மோசடியில் ஈடுபட சில ஆண்கள் திட்டமிட்டுள்ளனர்.
Also Read: “நலமுடன் இருக்கிறேன்” – உடல்நிலை குறித்து ப.சிதம்பரம் கொடுத்த அப்டேட்!
அதன்படி அச்சு அசலாக பெண்களைப் போலவே புடவை அணிந்து வந்து வேலை தொடர்பான கணக்கெடுப்பில் தங்களது புகைப்படங்களைப் ஆண்கள் சிலர் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் சுமார் 3 லட்ச ரூபாய் அளவுக்கு மோசடி நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
April 09, 2025 11:01 AM IST


