April 09, 20251:37 PM IST
Tamil Live Breaking News : அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
மேலும் அமலாக்கத்துறை சார்பில் கடந்த ஜனவரி மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், முன்னாள் உதவியாளர் சண்முகம் உள்ளிட்ட 13 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
இந்த நிலையில், தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நேரில் ஆஜரானார்.
அசோக் குமார் மற்றும் அவருடைய உதவியாளர்களுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பிய இன்று நேரில் ஆஜரானார்.

