Last Updated:
விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் 13,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரராக சாதனை படைத்தார். 403 ஆட்டங்களில் 386 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டினார்.
டி20 கிரிக்கெட் வரலாற்றில் 13,000 ரன்களை கடந்து இந்திய வீரர் விராட் கோலி புது சாதனை ஒன்றை படைத்தார்.
இந்தியாவின் ரன்மெஷின் என்று அழைக்கபடும் விராட் கோலி கிரிக்கெட்டில் பல சாதனைகளை தன்வசப்படுத்தி உள்ளார். அந்த வரிசையில் நேற்று மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 67 ரன்கள் விளாசிய விராட் கோலி டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 20வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பெங்களூரு அணி பேட்டிங் செய்த நிலையில், போட்டியின் 3வது ஓவரை மும்பை வீரர் டிரென்ட் போல்ட் வீசினார். அந்த ஓவரின் கடைசி இரண்டு பந்துகளை விராட் கோலி பவுண்டரிக்கு விரட்டினார்.
கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டிய போது டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி 13,000 ரன்களை கடந்தார். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 13,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் மற்றும் சர்வதேச அளவில் 2வது வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்.
இதுவரை 403 டி20 ஆட்டங்களில் பங்கேறுள்ள விராட் கோலி அதில் 386 இன்னிங்ஸ்களில் களமிறங்கி 13,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இதில் சர்வதேச டி20 போட்டிகளில் 4188 ரன்களும், ஐபிஎல் தொடரில் 8168 ரன்களும் சாம்பியன்ஸ் லீக்கில் 426 ரன்களும் அடித்துள்ளார்.
முன்னதாக 381 இன்னிங்ஸ்களில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் 13 ஆயிரம் ரன்களை கடந்து முதலிடத்தில் உள்ளார். மேலும், இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹால்ஸ், பாகிஸ்தானின் சோயிப் மாலிக், வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரென் பொல்லார்ட் ஆகியோரும் 13 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தனர்.
April 08, 2025 7:18 AM IST


