வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தை சீரமைக்கும் நோக்கில், கடந்த 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் மசோதா, எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இரு நாள்களுக்கு முன்பாக குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் அளித்தார்.
வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்கள் நியமனம், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாத்தை பின்பற்றுவோா் மட்டுமே வக்ஃப் சொத்துகளை அா்ப்பணிக்க முடியும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இதில் உள்ளன.
இந்நிலையில் இந்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

