April 06, 202511:42 AM IST
Tamil Live Breaking News : பிரதமர் மோடியை வரவேற்கும் தலைவர்கள் யார்?
சற்று நேரத்தில் மண்டபம் வரும் பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் வரவேற்கின்றனர்.
மேலும் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி, எம்.பி. ஜி.கே.வாசன் ஆகியோரும், பாஜக எம்எல்ஏக்களான நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோர் வரவேற்கிறார்கள்.
மேலும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், சரத்குமார் உள்ளிட்டோரும் பிரதமர் மோடியை வரவேற்கிறார்கள்.

