• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025 : சென்னை அணிக்கு ஹாட்ரிக் தோல்வி.. ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியிடம் வீழ்ந்தது

GenevaTimes by GenevaTimes
April 5, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL 2025 : சென்னை அணிக்கு ஹாட்ரிக் தோல்வி.. ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியிடம் வீழ்ந்தது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 05, 2025 7:30 PM IST

சென்னை அணி மும்பை அணிக்கு எதிராக நடந்த முதல் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.

சென்னை அணியில் விஜய் சங்கர் மட்டும் 69 ரன்கள் எடுத்தார்சென்னை அணியில் விஜய் சங்கர் மட்டும் 69 ரன்கள் எடுத்தார்
சென்னை அணியில் விஜய் சங்கர் மட்டும் 69 ரன்கள் எடுத்தார்

சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணிக்கு இன்றைய ஆட்டத்தின் முடிவு ஹாட்ரிக் தோல்வியாக அமைந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணிபேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 183 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

சென்னை அணி மும்பை அணிக்கு எதிராக நடந்த முதல் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. அதன்பின்னர் நடைபெற்ற பெங்களூரு, ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிக்கு எதிரான போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

183 ரன்கள் எடுத்த சென்னை அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல். ராகுல் 51 பந்துகளில் 3 சிக்சர் 6 பவுண்டரியுடன் 77 ரன்கள் எடுத்தார். அபிஷேக் போரெல் 33 ரன்களும், அக்சர் படேல் 21, சமீர் ரிஸ்வி 20, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 24 ரன்களும் எடுத்தனர்.

பவுலிங்கை பொருத்தளவில் சென்னை அணியில் முகேஷ் சவுத்ரியை தவிர்த்து மற்ற பவுலர்கள் டெல்லி அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர். முகேஷ் சவுத்ரி 4 ஓவர்கள் வீசி விக்கெட் ஏதும் எடுக்காமல் 50 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணியின் தொடக்கமே ஏமாற்றம் அளித்தது. 2 ஆவது ஓவரில் ரச்சின் ரவிந்திராவும், 3 ஆவது ஓவரில் ருதுராஜும் ஆட்டமிழந்து வெளியேறினர். ஓரளவு தாக்குப்பிடித்த டெவோன் கான்வே 14 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன்பின்னர் சிவம் துபே – விஜய் சங்கர் இணை அணியை சரிவிலிருந்து மீட்க போராடியது. துபே 15 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த ரவிந்திர ஜடேஜா 2 ரன்களில் வெளியேறினார்.

10.4 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து இணைந்த தோனி – விஜய் சங்கர் இணை நிதானமாக கடைசி ஓவர் வரை விளையாடியது.

இதையும் படிங்க – வானில் பறப்பதே இலக்கு – தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவன் நெகிழ்ச்சி பேட்டி…

விஜய் சங்கர் 54 பந்துகளில் 1 சிக்சர் 5 பவுண்டரியுடன் 69 ரன்களும், தோனி 26 பந்துகளில் 1 சிக்சர் 1 பவுண்டரியுடன் 30 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 158 ரன்கள் மட்டுமே எடுத்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

First Published :

April 05, 2025 7:15 PM IST

Read More

Previous Post

உயிருக்கு பயந்து, தனது மனைவியை அவரது காதலனுடன் சேர்த்துவைத்த நபர்… இறுதியில் நடந்த டிவிஸ்ட் இதுதான்…!

Next Post

HDFC கிரெடிட் கார்டு பாயின்ட்களை பணமாக எப்படி மாற்றலாம்…? தெரிஞ்சுக்கலாம் வாங்க…

Next Post
HDFC கிரெடிட் கார்டு பாயின்ட்களை பணமாக எப்படி மாற்றலாம்…? தெரிஞ்சுக்கலாம் வாங்க…

HDFC கிரெடிட் கார்டு பாயின்ட்களை பணமாக எப்படி மாற்றலாம்...? தெரிஞ்சுக்கலாம் வாங்க...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin