11
இதற்கு கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து, மொபைல் நம்பர் மூலமாகப் பதிவு செய்து, தனி நபர் மற்றும் வேலை சார்ந்த நிறுவனங்களை ஒருவர் உள்ளிட வேண்டும். அதன் பிறகு KYC ஆவணங்களை அப்லோடு செய்து, தேவையான கடன் தொகை மற்றும் கால அளவைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர், பணம் நேரடியாக வங்கிக் கணக்கில் கிரெடிட் செய்யப்படும். எந்த ஒரு அப்ளிகேஷன் மூலமாக கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பும் கடன் கால அளவு, வட்டி விகிதங்கள் ஆகியவற்றை ஒரு முறைக்கு பலமுறை சரிபார்த்த பிறகு செயல்முறையில் ஈடுபடுவது அவசியம்.


