Last Updated:
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி, 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓவியம் தொடர்பான சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது.
அரசு முறை பயணமாக தாய்லாந்து சென்ற பிரதமர் நரேந்திர மோடி, முன்னிலையில் டிஜிட்டல் தொழில்நுட்பம், கைவினைப் பொருட்கள் குறித்து பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தாய்லாந்து சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிம்ஸ்டெக் அமைப்பின் உச்சி மாநாடு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டு பாங்காக் சென்றார். அங்கு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி, 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓவியம் தொடர்பான சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி, நிலநடுக்கத்தால் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்தார். பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டை தாய்லாந்து நடத்தும் நிலையில், பிராந்திய ஒத்துழைப்பு புதிய வேகம் எடுத்துள்ளது என்றார்.
Also Read: Trump Tariffs: டிரம்பின் பரஸ்பர வரி.. இந்திய தொழில்துறை எதிர்கொள்ள உள்ள சவால்கள் என்னென்ன?
இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் தாய்லாந்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இலவச இ-விசாவை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
April 04, 2025 7:34 AM IST


