• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்தியாவில் நெட்ஃபிளிக்ஸ் மற்றும் பிரைம் வீடியோவை முந்தி 100 மில்லியன் சந்தாதாரர்களை எட்டிய  ஜியோ ஹாட்ஸ்டார்! 

GenevaTimes by GenevaTimes
April 2, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
இந்தியாவில் நெட்ஃபிளிக்ஸ் மற்றும் பிரைம் வீடியோவை முந்தி 100 மில்லியன் சந்தாதாரர்களை எட்டிய  ஜியோ ஹாட்ஸ்டார்! 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 02, 2025 6:32 PM IST

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோசினிமா ஆகிய இரண்டு தளங்களும் இணைந்து புதிதாக உருவாக்கப்பட்ட ஸ்ட்ரீமிங் தளமான ஜியோஹாட்ஸ்டார், 100 மில்லியனுக்கும் மேல் கட்டணம் செலுத்தும் சந்தாதாரர்களைப் பெற்று மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. தற்போது இந்தியாவின் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் சேவைகளில் ஒன்றாக வளர்ந்துள்ள ஜியோஹாட்ஸ்டார் தளத்திற்கு இது குறிப்பிடத்தக்க தருணமாகும்.

News18News18
News18

டிஸ்னி நிறுவனம் தனது இந்திய சொத்துக்களை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு (RIL) விற்ற பிறகு, இரண்டு ஸ்ட்ரீமிங் தளங்களின் இணைப்பு இறுதி செய்யப்பட்டது. இது ரிலையன்ஸ் மற்றும் தி வால்ட் டிஸ்னி கோ இடையே கூட்டு முயற்சியை உருவாக்கியது. இந்த ஒப்பந்தம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வியாகாம்18 மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை டிஸ்னியின் ஸ்டார் இந்தியாவுடன் இணைத்து, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோசினிமா ஆகிய இரண்டு தளங்களையும் ஒன்றாகக் கொண்டுவருவதை உள்ளடக்கியது. இப்போது ஜியோஹாட்ஸ்டார் என்று அழைக்கப்படும் புதிய தளம், இந்தியாவில் ஸ்ட்ரீமிங் நிலப்பரப்பை மாற்றும் வகையில் உள்ளது.

ரிலையன்ஸ்-டிஸ்னி நிறுவனங்களின் கூட்டு முயற்சியான ஜியோஹாட்ஸ்டார் தளத்திற்கு தலைவராக நிதா எம். அம்பானி மற்றும் ஒளிபரப்பு நிபுணர் உதய் சங்கர் ஆகியோர் வழிநடத்துகின்றனர். ஜியோ ஹாட்ஸ்டாரின் தலைமை நிர்வாக அதிகாரி கிரண் மணி, 100 மில்லியன் சந்தாதாரர்கள் எண்ணிக்கை குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பொழுதுபோக்குகளை வழங்குவதற்கான தளத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று கூறினார்.

இந்த சாதனை இந்தியாவின் ஸ்ட்ரீமிங் சந்தையின் திறனை நிரூபிப்பது மட்டுமல்லாமல், பார்வையாளர்களுக்கு புதுமைகளை வழங்குவதற்கும் தனித்துவமான அனுபவங்களை வழங்குவதற்கும் ஜியோஹாட்ஸ்டாரின் நோக்கத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும் அவர் எடுத்துரைத்தார்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், ஜியோஹாட்ஸ்டார் ஸ்ட்ரீமிங் துறையில் மிகப்பெரிய ஆதிக்க சக்தியாக மாறியுள்ளது, நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ போன்ற தளங்களை விஞ்சியுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். நெட்ஃபிக்ஸ் மற்றும் பிரைம் வீடியோவை விட அதிக மொத்த மணிநேர நிகழ்ச்சிகளுடன், லாபம் ஈட்டப் சிரமப்படும் சிறிய, பிராந்திய ஸ்ட்ரீமிங் தளங்களை கையகப்படுத்துவதன் மூலம் ஜியோஹாட்ஸ்டார் மேலும் விரிவடையும் நிலையில் உள்ளது.

ஒருபக்கம் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், போட்டி நிறைந்த இந்தியாவின் ஸ்ட்ரீமிங் சந்தையில் ஜியோஹாட்ஸ்டார் பல சவால்களை எதிர்கொள்ளும் எனக் கூறப்படுகிறது. கிரிக்கெட் போட்டிகள் மற்றும் பிக் பாஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்கள் அதன் பார்வையாளர்களில் பெரும்பகுதியை ஈர்த்திருந்தாலும், ஜியோசினிமாவின் முந்தைய உத்தி போன்று சரியான சந்தைப்படுத்தல் அல்லது யூசர் ஈடுபாடு இல்லாமல் கூடுதல் உள்ளடக்கத்தைச் சேர்ப்பது அதன் சந்தாதாரர் தளத்தை மேலும் வளர்ப்பதற்கான திறனைத் தடுக்கக்கூடும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஜியோஹாட்ஸ்டார் அதன் வளர்ச்சிப் பாதையைத் தொடர, போட்டியாளர்கள் நிறைந்த சந்தையில் உள்ளடக்க உருவாக்கம் மற்றும் யூசர் ஈடுபாட்டிற்கு மிகவும் கவனமான திட்டமிடலில் கவனம் செலுத்த வேண்டும்.

ஜியோஹாட்ஸ்டாருக்கு எதிர்காலம் பிரகாசமாகத் தெரிகிறது. ஆனால் போட்டி தீவிரமடைவதால், இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பொழுதுபோக்குத் துறையில் நிலையான வளர்ச்சி மற்றும் வெற்றியை உறுதி செய்ய அதன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை கவனமாக திட்டமிட வேண்டும்.

First Published :

April 02, 2025 6:31 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

இந்தியாவில் நெட்ஃபிளிக்ஸ் மற்றும் பிரைம் வீடியோவை முந்தி 100 மில்லியன் சந்தாதாரர்களை எட்டிய  ஜியோ ஹாட்ஸ்டார்! 

Read More

Previous Post

IPL 2025 : வெற்றிப் பாதைக்கு சிஎஸ்கே திரும்ப என்ன செய்ய வேண்டும்? லிஸ்ட் போடும் ஸ்ரீகாந்த்

Next Post

எரிவாயு குழாய் தீ விபத்துகுறித்து 20 அமைப்புகள் விசாரணையைத் தொடங்கியுள்ளன – Malaysiakini

Next Post
எரிவாயு குழாய் தீ விபத்துகுறித்து 20 அமைப்புகள் விசாரணையைத் தொடங்கியுள்ளன – Malaysiakini

எரிவாயு குழாய் தீ விபத்துகுறித்து 20 அமைப்புகள் விசாரணையைத் தொடங்கியுள்ளன – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin