• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || வேட்புமனுக்கள் நிராகரிப்பு : இடைநிறுத்த உத்தரவு

GenevaTimes by GenevaTimes
April 1, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || வேட்புமனுக்கள் நிராகரிப்பு : இடைநிறுத்த உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தேர்தல் நடவடிக்கைகளை புதன்கிழமை (02) வரை இடைநிறுத்துமாறு தொடர்புடைய தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 இந்த மனுக்களை,  மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முகமது லஃபார் தாஹீர் மற்றும் கே.பி.பிராணந்து ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாமினால் இந்த உத்தரவு செவ்வாய்க்கிழமை (01)பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் ‘மக்கள் போராட்ட அமைப்பு’, ‘சுயேச்சைக் குழுக்கள்’, ‘இலங்கைத் தமிழர் அரசுகட்சி’ உள்ளிட்ட 40 கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தாக்கல் செய்த மனுக்களில் தேர்தல் ஆணைக்குழு உள்ளிட்ட குழுக்கள் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தூய தேசத்திற்கான கட்சியின் தலைவர் எஸ். எம் .இஷாம் மரிக்கார் கருத்துரைக்கையில்…

“புத்தளம் மா நகர சபை, கற்பிட்டி பிரதேச சபை ஆகிய இரு சபைகளிலும் ஏனைய சபைகளிலும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனு தொடர்பில் தீர்வு எடுக்கும் வரைக்கும் தேர்தலுக்குரிய அனைத்து விடயங்களையும் நிறுத்தி வைக்குமாறு தொடர்புடைய தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது” என இஷாம் மரிக்கார், ஊடகங்களுக்கு கருத்துரைத்தார்.

புத்தளம் மா நகர சபையிலும், கற்பிட்டி பிரதேச சபையிலும் இரட்டைக் கொடி சின்னத்தில் வேட்பு மனுக்களை தூய தேசத்திற்கான கட்சி தாக்கல் செய்திருந்தது. அவற்றை நிராகரித்தமைக்காக நாங்கள் அதை மீள் பரிசோதனை செய்ய வேண்டும் என்று வழக்குத் தாக்கல் செய்திருந்தோம். அந்த வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை (1) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது.

இந்த வழக்கிலே ஒரு நியாயம் உள்ளதாக மிகத் தெளிவாக கூறி இருக்கிறார்கள். நாளை (02) இது சம்பந்தமான தெளிவான முடிவொன்று எடுக்கப்படும். அதுவரைக்கும் புத்தளம் மா நகர சபை, கற்பிட்டி பிரதேச சபை ஆகிய இரு சபைகளிலும் ஏனைய சபைகளிலும் இந்த பிரச்சினை சம்பந்தமான தீர்வு எடுக்கும் வரைக்கும் தேர்தலுக்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்குமாறு தற்காலிக தடை உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது.

ஆகவே இதுவும் எங்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். நாட்டில் இன்னும் நீதி சாகவில்லை. நீதி இருக்கிறது என்பதை மிகத் தெளிவாக  நீதிமன்றம் எடுத்துரைத்துள்ளது. அதே நேரம் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பதற்காக போடப்பட்ட சட்டமூலத்தை வைத்து இளைஞர்களை நிராகரித்திருக்கிறார் கள்.

ஆகவே, நிராகரிக்கப்பட்ட வேட்பு மனு தாக்கல்களுக்கு எதிராக எமக்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும் என எமது நாட்டின் சட்டத்தை நம்பி நாங்கள் தாக்கல் செய்த வழக்கு  வெற்றியாக அமைந்திருக்கிறது.

ஒரு நாள் இந்த நாட்டின் தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை நிறுத்தி இருக்கிறார்கள் என்றால், நீதிக்கு ஆதரவாக அநீதிக்கு எதிராக செய்கின்ற போராட்டத்திற்கு வெற்றியை நீதிமன்றம் வழங்கி இருக்கிறது.

 நாங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்றோம். நாளை புதன்கிழமை (02) எங்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும். ஆகவே எங்களுடைய ஆதரவாளர்கள், ஏக்கத்தோடு இருக்காமல் எதிர்பார்ப்போடும் நம்பிக்கையோடும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இது குறித்து, சட்டத்தரணி அஜிரா அஸ்வர், கருத்துரைக்கையில்…

புத்தளம் மா நகர சபை மற்றும் கற்பிட்டி பிரதேச சபைக்கான வேட்புமனுக்கள், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மற்றும் தூய தேசத்திற்கான கட்சிக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கு எதிராக  மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்25 ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்திருந்தோம். இதனடிப்படையில்,   செவ்வாய்க்கிழமை (01) குறித்த வழக்கு பரிசீலிக்கப்பட்டு அதனடிப்படையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் இதற்கு தற்காலிக தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. நாளை புதன்கிழமை (02) ஆம் திகதி வரை எந்த வித தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளக்கூடாது என மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் லஃபார் தாஹீர் தலைமையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார். 



Read More

Previous Post

நிலநடுக்கம் போன்ற நடுக்கம் ஏற்பட்டதாகப் பாதிக்கப்பட்டவர் கூறுகிறார் – Malaysiakini

Next Post

ஒரு மணிநேரத்தில் 10 லட்சம் பயனர்கள்! ஜிப்லியால் சாட்ஜிபிடி சாதனை!!

Next Post
ஒரு மணிநேரத்தில் 10 லட்சம் பயனர்கள்! ஜிப்லியால் சாட்ஜிபிடி சாதனை!!

ஒரு மணிநேரத்தில் 10 லட்சம் பயனர்கள்! ஜிப்லியால் சாட்ஜிபிடி சாதனை!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin