06
யுபிஐ செயலியில் புதிய மாற்றம்: செயல்படாத செல்போன் எண்களுடன் இணைக்கப்பட்ட யுபிஐ ஐடிகளை ஏப்ரல் 1ம் தேதி முதல் தேசிய பணம் செலுத்தும் நிறுவனம் ரத்து செய்ய உள்ளது. இதன் காரணமாக, அத்தகைய செயல்படாத செல்போன் எண்களை வைத்துள்ள வாடிக்கையாளர்கள், கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற ஆன்லைன் பணப் பரிமாற்ற செயலிகளைப் பயன்படுத்த முடியாது. செல்போன் எண்களை மாற்றியும், அதை தங்களின் வங்கிக்குத் தெரிவிக்காமல் இருப்பவர்கள், வேறு நபர்களுக்கு மாற்றப்பட்ட செய்தி போன்ற சேவைகளுக்குப் பயன்படுத்தப்படாத செயல்படாத செல்போன் எண்கள் வைத்திருப்பவர்கள் ஆகியோரின் யுபிஐ ஐடிகள் நீக்கப்படும் அபாயம் உள்ளது. ஆகையால், அந்த அபாயத்தைத் தவிர்க்கும் வகையில் அவர்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்கள் செயல்படும் நிலையில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.


