• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

உலகின் அனைத்து நாடுகளுக்கும் பாரபட்சமின்றி இறக்குமதி வரி விதிக்கப்படும்: ட்ரம்ப் அறிவிப்பு | tariffs will be imposed on all world countries without discrimination Trump announces

GenevaTimes by GenevaTimes
April 1, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
உலகின் அனைத்து நாடுகளுக்கும் பாரபட்சமின்றி இறக்குமதி வரி விதிக்கப்படும்: ட்ரம்ப் அறிவிப்பு | tariffs will be imposed on all world countries without discrimination Trump announces
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாஷிங்டன்: அனைத்து உலக நாடு​களின் பொருட்​கள் மீதான இறக்​கும​திக்​கும் கூடு​தல் வரி விதிக்​கப்​படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார்.

அமெரிக்​கா​வின் அதிப​ராக 2-வது முறை​யாக பொறுப்​பேற்ற டொனால்டு ட்ரம்ப், தங்​கள் நாட்​டின் பொருட்​களுக்கு இந்​தியா உள்​ளிட்ட பல நாடு​கள் அதிக வரி விதிப்​ப​தாக குற்​றம்​சாட்​டி​னார். இதற்கு பதிலடி​யாக, அமெரிக்​கா​வில் இறக்​கும​தி​யாகும் பிற நாடு​களின் பொருட்​களுக்​கு, சம்​பந்​தப்​பட்ட நாடு​கள் விதிக்​கும் அதே அளவுக்கு (பரஸ்பர வரி) ஏப்​ரல் 2-ம் தேதி முதல் வரி விதிக்​கப்​படும் என அறி​வித்​தார். இதையடுத்​து, இது தொடர்​பாக உலக நாடு​கள் அமெரிக்கா​வுடன் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கின்​றன.

இதனிடையே, ட்ரம்​பின் கூடு​தல் வரி விதிப்​பால் நியாயமற்ற வகை​யில் அமெரிக்க பொருட்​களுக்கு அதிக வரி விதிக்​கும் 10 முதல் 15 நாடு​களுக்கு மட்​டுமே பாதிப்பு ஏற்​படும் என தகவல் வெளி​யாகி இருந்​தது. இந்​நிலை​யில், அதிபர் ட்ரம்ப் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறும்​போது, “அனைத்து உலக நாடு​களின் பொருட்​கள் மீதும் கூடு​தல் வரி விதிக்​கப்​படும். என்ன நடக்​கிறது என்று பார்ப்​போம்” என்​றார்.

பரஸ்பர வரி விதிக்​கப்​படும் நாளான ஏப்​ரல் 2 அமெரிக்கா​வுக்கு விடு​தலை நாள் என ட்ரம்ப் ஏற்​கெனவே கூறி​யிருந்​தார். அந்த நாள் நெருங்​கிக் கொண்​டிருக்​கும் நிலை​யில், கடைசி நேரத்​தில் வரி​களை சிறிதளவு குறைக்க வாய்ப்பு இருப்​ப​தாக நம்​பப்​படு​கிறது.

மேலும் ட்ரம்ப் கூறும்​போது, “அமெரிக்கா மீது அதிக வரி விதிக்​கும் நாடு​களு​டன் இனிமை​யாக​வும் தாராள​மாக​வும் கனி​வாக​வும் இருப்​பேன். பல தசாப்​தங்​களாக உலக நாடு​கள் அமெரிக்​கா​விடம் காட்​டிய தாராளத்​தை​விட எங்​கள் வரி விதிப்பு கனி​வாக இருக்​கும். வரலாற்​றில் இது​வரை எந்த ஒரு நாடும் பாதிக்​கப்​ப​டாத அளவுக்கு எங்​கள் நாடு பாதிப்​புக்​குள்​ளானது. ஆனால் உலக நாடு​களைப்​போல் அல்​லாமல் மற்ற நாடு​கள் மீது இனிமை​யாக நடந்து கொள்​வோம். இந்த நடவடிக்​கை​யால் எங்​கள் நாட்​டுக்கு கணிச​மான வரு​வாய் கிடைக்​கும்” என்​றார்.

இதுகுறித்து அமெரிக்க வர்த்தக துறை உயர் அதி​காரி பீட்​டர் நவரோ கூறும்​போது, “உலக நாடு​கள் மீதான பரஸ்பர வரி மூலம் ஆண்​டுக்கு 600 பில்​லியன் டாலர் வரு​வாய் கிடைக்​கும். இதில் வாகன இறக்​கும​தி மூலம்​ மட்​டும்​ 100 பில்​லியன்​ டாலர்​ கிடைக்​கும்​” என்​றார்​.

ஈரான் மீது வெடிகுண்டு வீசுவோம்: ஈரான் தனது அணு ஆயுத திட்டங்களை கைவிடாவிட்டால் அந்த நாட்டின் மீது வெடிகுண்டு களை வீசுவோம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார். ஆனால், இதை ஏற்க மறுத்து வரும் ஈரான் அதிகாரிகள், தங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி தரப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி மூலம் ட்ரம்ப் அளித்த பேட்டியில் கூறும் போது, “அணு ஆயுத திட்டங்கள் தொடர்பான புதிய ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாவிட்டால் அந்நாட்டின் மீது வெடிகுண்டு வீசப்படும். இது அவர்கள் இதுவரை பார்த்திராத தாக்குதலாக இருக்கும்” என மீண்டும் எச்சரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்பதற்காக ஈரான் ராணுவம் ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்துள்ளது. வான்வழி தாக்குதலை சமாளிக்கக் கூடிய இந்த ஏவுகணைகள் ‘ஏவுகணை நகரம்’ என பெயரிடப்பட்டுள்ள தரைகீழ் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவையும் ஈரான் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானின் உயர் அதிகாரம் பெற்ற தலைவர் அயதொல்லா காமேனிக்கு கடந்த மார்ச் 12-ம் தேதி ஒரு கடிதம் எழுதினார். அதில், ஈரானின் அணு ஆயுதங்களை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இது தொடர்பாக அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த முடியாது என ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் கூறியிருந்தார். அதேநேரம் மறைமுக பேச்சுவார்த்தைக்கு தயார் என ஓமன் அரசு மூலம் அமெரிக்காவுக்கு ஈரான் பதில் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

தமிழ்நாட்டில் இன்று (ஏப்.1) முதல் நடைமுறைக்கு வந்த புதிய விதிமுறைகள்… என்னென்ன தெரியுமா?

Next Post

Letupan paip gas bawah tanah punca kebakaran besar di Putra Height | Makkal Osai

Next Post
Letupan paip gas bawah tanah punca kebakaran besar di Putra Height | Makkal Osai

Letupan paip gas bawah tanah punca kebakaran besar di Putra Height | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin