March 30, 20256:53 PM IST
CSK vs RR Live Updates : யார் வெற்றிப் பாதைக்கு திரும்புவது?
ஐபிஎல் தொடரில், இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 3-ஆவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்-உடன் பலப்பரிட்சை நடத்தவுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய சிஎஸ்கே, 2வது போட்டியில் பெங்களூரு அணியிடம் தோல்வி அடைந்தது. சொந்த மண்ணில் தோல்வியடைந்ததால் சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில் இருக்கும் நிலையில், அசாம் மாநிலம் கவுகாத்தியில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்ததால், இன்று வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. இதனால், யார் வெற்றிப் பாதைக்கு திரும்புவது என்பதில் சிஎஸ்கே – ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே போட்டி நிலவுகிறது.

