Last Updated:
Hill Garlic: 600 ரூபாய்க்கு விற்பனையான நீலகிரி மலைப்பூண்டு தற்போது வெறும் 60 ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மலை மாவட்டமான நீலகிரி விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் மாவட்டமாக விளங்குகிறது. இங்கு மலை காய்கறிகளாக கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், பீன்ஸ் மற்றும் வெள்ளைப் பூண்டு ஆகியவை பயிரிடப்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெள்ளைப் பூண்டு கிலோ 600 ரூபாய் வரை விற்பனையை செய்யப்பட்டு விவசாயிகளுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தியது. ஆனால் தற்பொழுது கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை ஆவதால் விவசாயிகள் கவலையில் இருக்கின்றனர்.
வெள்ளைப் பூண்டு விதைகள் ஒரு கிலோவிற்கு 550 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கி வந்ததாகவும், தற்பொழுது ஒரு கிலோ 60 முதல் 80 ரூபாய் வரை விற்பனையாவதால் கூலி கொடுப்பதற்கு சரியாகி விடுகிறது என புலம்புகின்றனர் விவசாயிகள்.
இதையும் படிங்க: அடி பிலீவர் அடி… பயணியை ஈர்த்த கோவில் ஊர்வலம்… வாத்தியத்தை ரசித்து உற்சாகம்…
அதிகமான பரப்பளவில் வெள்ளைப் பூண்டு விளைவிக்கப் பட்டுள்ளதால் தற்பொழுது விலை குறைவாக உள்ளது எனவும் தெரிவிக்கின்றனர். மேலும் வெள்ளைப் பூண்டை பதப்படுத்தி வைத்து அதிகமான விலை விற்கும் பொழுது விற்பனை செய்ய ஏதுவாக இடம் இல்லாததால் கிடைக்கும் விலைக்கு விற்பனை செய்கின்றோம் என தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து வெள்ளைப் பூண்டு அறுவடை செய்து கொண்டிருக்கும் விவசாயி சிவக்குமார் கூறுகையில், “நான் முத்தோரை பகுதியைச் சேர்ந்தவன். வெள்ளைப் பூண்டு விவசாயம் செய்து வருகிறேன். கடும் விலை வீழ்ச்சியால் கவலையில் உள்ளோம். 450 ரூபாய் கொடுத்து விதை வாங்கி வந்து தற்பொழுது 60 ரூபாய்க்கு தான் விற்பனை ஆகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி 40 ரூபாயிலிருந்து 60 வரை மட்டுமே விற்பனை ஆகிறது. முன்பொரு காலத்தில் 600 ரூபாய் விற்பனையான வெள்ளைப் பூண்டு தற்பொழுது 60 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. மேலும் பூண்டு விவசாயத்தில் முதலீடும் அதிகமாக உள்ளது.
இதையும் படிங்க: கோவையில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை… ஒரே இடத்தில் திரண்ட பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள்…
விலைப் பொருட்களை தேக்கி வைத்து விற்பனை செய்யும் அளவிற்கு வசதிகள் இல்லை. புகை போட்டு வெள்ளைப் பூண்டைக் காய வைக்கும் முறை நீலகிரியில் இதுவரை இல்லை. சாத்தியப்படுமா என்பதும் கேள்விக்குறியே” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
The Nilgiris,Tamil Nadu
March 30, 2025 5:22 PM IST
Hill Garlic: 600க்கு விற்பனையான பூண்டு இப்போ வெறும் 60 ரூபாய்… நீலகிரி மலைப் பூண்டின் தலைகீழ் நிலவரம்…

