• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025 : வாஷிங்டன் சுந்தருக்கு ஆதரவு தெரிவித்த சுந்தர் பிச்சை.. எக்ஸ் தளத்தில் லைக்ஸை குவித்த பதிவு

GenevaTimes by GenevaTimes
March 27, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL 2025 : வாஷிங்டன் சுந்தருக்கு ஆதரவு தெரிவித்த சுந்தர் பிச்சை.. எக்ஸ் தளத்தில் லைக்ஸை குவித்த பதிவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 27, 2025 10:12 PM IST

குஜராத் அணி தனது இரண்டாவது போட்டியில், வரும் சனிக்கிழமை அன்று மும்பை அணியை அகமதாபாத்தில் எதிர்கொள்கிறது.

வாஷிங்டன் சுந்தர் - சுந்தர் பிச்சைவாஷிங்டன் சுந்தர் - சுந்தர் பிச்சை
வாஷிங்டன் சுந்தர் – சுந்தர் பிச்சை

கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு ஆதரவு தெரிவித்து, கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவு லைக்ஸ்களை குவித்து வருகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், குஜராத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டி நேற்று முன்தினம் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 243 ரன்கள் குவித்தது. இதையடுத்து 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணி, 232 ரன்கள் மட்டுமே எடுத்து, 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில், இந்திய அணியிலேயே விளையாடிய வாஷிங்டன் சுந்தர் இடம் பெறவில்லை. இதனால் அனைத்து ரசிகர்களும் கேள்வி எழுப்பி இருந்தார்கள். மேலும், சில விமர்சகர்கள் சுப்மான் கில் கேப்டன்ஷிப் எதிர்பார்த்த அளவு இல்லை என்றும், அவர் கேப்டன் பொறுப்புக்கு இன்னும் தயாராகவில்லை என்றும் கூறியிருந்தனர்.

சிறந்த ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் குஜராத் அணியில் பிளேயிங் லெவனில் இடம் பெறாதது கடும் விமர்சனங்களை கிளப்பி வருகிறது. இது குறித்து எக்ஸ் தளத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதில், புஷ்கர் என்பவர், “இந்திய அணியிலேயே ஆடும் லெவனில் வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றிருந்தார். ஆனால், ஐபிஎல் தொடரில் ஆடும் லெவனில் ஏன் இல்லை?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

I have been wondering this too:)


— Sundar Pichai (@sundarpichai) March 25, 2025

இந்தப் பதிவுக்கு கமெண்ட் செய்த கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, “எனக்கும் வாஷிங்டன் சுந்தர் அணியில் இல்லாதது ஆச்சரியம் அளித்தது” என்று பதிவிட்டிருந்தார். பெரும்பாலும் சுந்தர் பிச்சை எக்ஸ் தளத்தில் பதிவிடுவதோ அல்லது பதில் கூறுவதோ கிடையாது.

இதையும் படிங்க – IPL 2025 : காலில் விழ ரசிகருக்கு பணம் கொடுத்தாரா ரியான் பராக்? சந்தேகம் கிளப்பும் ரசிகர்கள்..

ஆனால், வாஷிங்டன் சுந்தருக்கு ஆதரவாக அவர் பதிவிட்டுள்ளது லைக்ஸ்களை குவித்து வருகிறது. குஜராத் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பதால், அந்த அணி மீது நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. குஜராத் அணி தனது இரண்டாவது போட்டியில், வரும் சனிக்கிழமை அன்று மும்பை அணியை அகமதாபாத்தில் எதிர்கொள்கிறது.

First Published :

March 27, 2025 10:12 PM IST

Read More

Previous Post

‘தென்னவருக்கும் மன்னவருக்கும் ட்விஸ்ட்.. தலைநகர் பயணமும் தலை சுற்றும் தகவலும்’

Next Post

தொடரும் கேஸ் டேங்கர் லாரிகள் போராட்டம் – எண்ணெய் நிறுவன அதிகாரிகள் உடனான பேச்சு தோல்வி | Gas tanker truck protest continues

Next Post
தொடரும் கேஸ் டேங்கர் லாரிகள் போராட்டம் – எண்ணெய் நிறுவன அதிகாரிகள் உடனான பேச்சு தோல்வி | Gas tanker truck protest continues

தொடரும் கேஸ் டேங்கர் லாரிகள் போராட்டம் - எண்ணெய் நிறுவன அதிகாரிகள் உடனான பேச்சு தோல்வி | Gas tanker truck protest continues

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin