• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கூட்டணி குறித்து பாஜக தலைமையிடம்தான் பேசுவோம்: அமித்ஷா, நட்டாவிடம் அதிமுக தலைவர்கள் நேரில் வலியுறுத்தல் | ADMK leaders met BJP leaders

GenevaTimes by GenevaTimes
March 27, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
கூட்டணி குறித்து பாஜக தலைமையிடம்தான் பேசுவோம்: அமித்ஷா, நட்டாவிடம் அதிமுக தலைவர்கள் நேரில் வலியுறுத்தல் | ADMK leaders met BJP leaders
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: தமிழ்​நாடு சட்​டப்​பேர​வைக்கு அடுத்த ஆண்டு தேர்​தல் நடை​பெறுகிறது. இந்​நிலை​யில், எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி தலை​மை​யில் அதி​முக தலை​வர்​கள் டெல்​லி​யில் நேற்று முன் தினம் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா, பாஜக தலை​வர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்​தித்து பேசினர்.

அமித் ஷாவுட​னான சந்​திப்​பில் முன்​னாள் முதல்​வர் பழனிச்​சாமி, மாநிலங்​களவை எம்​.பி.க்​கள் டாக்​டர் எம்​.தம்​பிதுரை, சி.​வி. சண்​முகம், முன்​னாள் அமைச்​சர்​கள் எஸ்​.பி.வேலுமணி, கே.பி.​முனு​சாமி ஆகியோர் பங்​கேற்​றனர்.

முன்​ன​தாக பாஜக தலை​வர் நட்​டாவை தம்​பிதுரை மட்​டும் சந்​தித்​தார். இந்த சந்​திப்​பு​களின் போது தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் அதி​முக – பாஜக மீண்​டும் கூட்​டணி வைப்​பது குறித்து ஆலோ​சனை நடத்​தி​ய​தாக கட்சி வட்​டாரங்​கள் கூறின. இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் பாஜக தலை​வர்​கள் கூறும்​போது, ‘‘ஒபிஎஸ், சசிகலா உள்​ளிட்ட அதிருப்தி தலை​வர்​களை​யும் உடன் சேர்க்க அதி​முக​விடம் அறி​வுறுத்​தப்​பட்​டது. அவர்​களுக்கு விருப்​பம் இல்​லாத இந்த சேர்க்கை குறித்து யோசிப்​ப​தாக அவர்​கள் தெரி​வித்​தனர். அண்ணா விவ​காரத்​தில் அண்​ணா​மலை – அதி​முக தலை​வர்​கள் இடையே ஏற்​பட்ட மோதலால் எடப்​பாடி பழனிச்​சாமி அவரை தவிர்க்​கிறார்.

இதனால், பாஜக தேசிய தலை​வர்​களு​டன் கூட்​டணி பேச்​சு​வார்த்​தையை நேரடி​யாக பேச அவர் விரும்​பு​கிறார். சின்​னம் மற்​றும் தலை​வர்​கள் மீதான வழக்​கு​களை தேர்​தலுக்கு முன்​பாக நிரந்​தர​மாக முடிக்​க​வும் அதி​முக​வினர் விரும்​பு​கின்​றனர். கூட்​ட​ணிக்கு முன்​பாக மீண்​டும் தம்​பிதுரைக்கு துணை சபா​நாயகர் பதவி பெற​வும் விருப்​பம் காட்​டினர். தமிழ்​நாட்​டில் பாஜக​வுக்கு ஆதரவு பெருகி வரு​கிறது. எனவே, இந்த முறை அதி​முக​வுடன் கூட்​டணி வைப்​ப​தால் திமுக ஆட்​சிக்கு முடிவு கட்​டப்​படும்” என்று தெரி​வித்​தனர்.

எனினும் இந்த சந்​திப்​பு​கள் குறித்து 2 கட்​சிகள் சார்​பிலும் அதி​காரப்​பூர்​வ​மான தகவல்​கள் இல்​லை. ஆனால், இந்த சந்​திப்​புக்கு முன்​ன​தாக மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா, நாடாளு​மன்​றத்​தில் பேசிய காட்​சிப் பதிவை தனது எக்ஸ் தளத்​தில் பதி​விட்​டிருந்​தார். அதில், “தம்​பிதுரைஜிக்கு நான் உறுதி அளிக்​கிறேன். 2026-ல் தமிழ்​நாட்​டில் தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்சி அமை​யும். மது, ஊழல் என இரண்​டுக்​கும் முடிவு கட்​டப்​படும்” என்று அமித் ஷா பேசி​யுள்​ளார்.

டெல்லி சந்​திப்​புக்கு முன்​ன​தாக பாஜக – அதி​முக தலை​வர்​கள் சிலர் தமிழகத்​தில் கூட்​டணி அமைப்​பது குறித்து பேசி​யுள்​ளனர். இனி வெளிப்​படை​யாக மேலும் சில சந்​திப்​பு​களை நடத்​திய பின் அதி​காரப்​பூர்​வ​மாக கூட்​ட​ணி குறித்​த அறி​விப்​பு வெளி​யாகும்​ என்​று தெரிகிறது.



Read More

Previous Post

மடானி மசூதி அடிக்கல் நாட்டு விழா இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு | Makkal Osai

Next Post

இந்திய கோலி சோடாவுக்கு வெளிநாடுகளில் அதிகரிக்கும் மவுசு | Indian goli Soda sees increasing demand abroad

Next Post
இந்திய கோலி சோடாவுக்கு வெளிநாடுகளில் அதிகரிக்கும் மவுசு | Indian goli Soda sees increasing demand abroad

இந்திய கோலி சோடாவுக்கு வெளிநாடுகளில் அதிகரிக்கும் மவுசு | Indian goli Soda sees increasing demand abroad

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin