• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“காஷ்மீரில் இருந்து பிரிவினைவாதம் தூக்கி வீசப்பட்டுள்ளது; பிரதமர் மோடிக்கு கிடைத்த வெற்றி” – அமித் ஷா பெருமிதம் | Two separatist groups sever links with Hurriyat; Amit Shah welcomes move

GenevaTimes by GenevaTimes
March 25, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
“காஷ்மீரில் இருந்து பிரிவினைவாதம் தூக்கி வீசப்பட்டுள்ளது; பிரதமர் மோடிக்கு கிடைத்த வெற்றி” – அமித் ஷா பெருமிதம் | Two separatist groups sever links with Hurriyat; Amit Shah welcomes move
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: அனைத்து கட்சி ஹுரி​யத் மாநாடு கூட்​ட​ணி​யில் இருந்து 2 அமைப்​பு​கள் விலகி உள்​ளன. இது, பிரதமர் நரேந்​திர மோடிக்கு கிடைத்த மிகப்​பெரிய வெற்றி என்று மத்​திய அமைச்​சர் அமித் ஷா தெரி​வித்​துள்​ளார்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 1993-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி, ‘அனைத்து கட்சி ஹுரி​யத் மாநாடு’ என்ற கூட்​டணி உரு​வாக்​கப்​பட்​டது. இதில் பல்​வேறு அரசியல் கட்​சிகள், மத அமைப்​பு​கள், பிரி​வினை​வாத அமைப்​பு​கள் இணைந்​தன.

இந்த கூட்​டணி காஷ்மீர் முழு​வதும் தீவிர​வாத, பிரி​வினை​வாத அமைப்​பு​களை ஊக்​கு​வித்​தது. பாகிஸ்​தானின் பினாமி​யாக செயல்​பட்டு வந்​தது.

கடந்த 2016 முதல் 2018 வரை காஷ்மீரில் மக்​கள் ஜனநாயக கட்​சி, பாஜக கூட்​டணி ஆட்சி நடை​பெற்​றது. அப்​போது ஹுரி​யத் மாநாடு கூட்​ட​ணி​யின் பிரி​வினை​வாத தலை​வர்​கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக திட்​ட​மிட்​டது.

அப்​போதைய முதல்​வரும் மக்​கள் ஜனநாயக கட்​சி​யின் தலை​வரு​மான மெகபூபா முப்​தி, பாஜக​வின் முயற்​சிகளை தடுத்​தார். இதன் காரண​மாக கூட்​டணி உடைந்​து, ஆட்சி கவிழ்ந்​தது.

கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்​டில் 370-வது சட்​டப்​பிரிவை ரத்து செய்து காஷ்மீருக்​கான சிறப்பு அந்​தஸ்தை மத்​திய அரசு நீக்​கியது. அப்​போது ஹுரி​யத் மாநாடு கூட்​ட​ணி​யின் மூத்த தலை​வர்​கள் வீட்டு சிறை​யில் வைக்​கப்​பட்​டனர். தீவிர​வாத அமைப்​பு​கள் மீது மிகக் கடுமை​யான நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்​டன.

இதனிடையே, கடந்த ஆண்டு நடை​பெற்ற காஷ்மீர் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேசிய மாநாடு கட்சி வெற்றி பெற்​று, அந்த கட்​சி​யின் மூத்த தலை​வர் உமர் அப்​துல்லா முதல்​வ​ராக பதவி​யேற்​றார்​. தற்​போது காஷ்மீரில் சட்​டம், ஒழுங்கை நிலை​நாட்ட ஹுரி​யத் மாநாடு தலை​வர் மிர்​வைஸ் உமர் பரூக் வீட்​டுக் காவலில் வைக்​கப்​பட்டுள்​ளார்.

இந்த சூழலில் ஹுரி​யத் மாநாடு கூட்​ட​ணி​யில் இருந்து ஜம்மு காஷ்மீர் மக்​கள் இயக்​கம் மற்​றும் ஜனநாயக அரசி​யல் இயக்​கம் ஆகிய இரு அமைப்​பு​கள் விலகி உள்​ளன. இதுகுறித்து மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான மத்​திய அரசின் கொள்​கைளால் ஜம்மு காஷ்மீரில் இருந்து பிரி​வினை​வாதம் தூக்கி வீசப்​பட்டு உள்​ளது. இரு அமைப்​பு​கள் ஹுரி​யத் உடனான உறவை முறித்து உள்​ளன.

இதை முழு​மனதுடன் வரவேற்​கிறேன். பாரதத்​தின் ஒற்றுமை ஓங்கி வளர்​கிறது. வளம், செழு​மை, அமை​தி, ஒன்​றிணைந்த பாரதத்தை கட்டி எழுப்​புவது பிரதமர் நரேந்​திர மோடி​யின் தொலைநோக்கு பார்வை ஆகும். தற்​போது அவருக்கு மிகப்​பெரிய வெற்றி கிடைத்​திருக்​கிறது. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்.



Read More

Previous Post

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூடு ; சந்தேக நபர் உட்பட ஐவர் கைது

Next Post

கோயில் நில பிரச்சனைகளுக்கு எப்போது விடிவுகாலம்! – Malaysiakini

Next Post
கோயில் நில பிரச்சனைகளுக்கு எப்போது விடிவுகாலம்! – Malaysiakini

கோயில் நில பிரச்சனைகளுக்கு எப்போது விடிவுகாலம்! – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin