கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகலகம் வீதியில் மார்ச் 17 ஆம் திகதி இரவு, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
அதற்கமைய துப்பாக்கிச்சூடு நடத்திய , கிராண்ட்பாஸ், வெஸ்குமார வீதியை சேர்ந்த 32 வயதுடைய சந்தேக நபர் செவ்வாய்க்கிழமை (25) அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

