Last Updated:
Ramzan Offer: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகள் ஆஃபர் விலையில் விற்பனை செய்யும் நிலையில் மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தளூர் திருமணஞ்சேரியில் உள்ள ஒரு காய்கறிக் கடையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகள் ஆஃபர் விலையில் கொடுக்கப்பட்டு வருகிறது.
பொதுவாகப் பண்டிகை நாட்கள் என்றால் துணிக் கடைகள், உணவகங்கள், காய்கறிக் கடைகள், ஸ்வீட் கடைகளில் சலுகை விலையில் விற்பனை செய்வது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள இந்த காய்கறிக் கடையில் காய்கறிகள் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.
4 கிலோ மிளகாய் 100 ரூபாய், தக்காளி 4 கிலோ 50 ரூபாய், பொடி பல்லாரி 7 கிலோ 100 ரூபாய், பெரிய பல்லாரி 3 கிலோ 100 ரூபாய், சின்னவெங்காயம் 4 கிலோ 100 ரூபாய், பொடி உருளை 5 கிலோ 100 ரூபாய் எனக் காய்கறிகள் சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: Watermelon Milkshake: சம்மருக்கு இது செம்ம ஜூஸ்… சிறியவர் முதல் பெரியவர் வரை கவரும் தர்பூசணி மில்க் ஷேக்…
இது குறித்துக் கடையின் உரிமையாளர் கார்த்திகேயன் கூறுகையில், “ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆஃபர் கொடுத்து வருகிறோம். காய்கறிகளின் வரத்து அதிகமாக இருந்தாலும் பொதுமக்கள் மகிழ்ச்சியாகப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்பதற்காக இந்த ஆஃபர் கொடுத்து வருகிறோம்.
ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை நாட்களில் சலுகை விலையில் காய்கறிகளை விற்பனை செய்து வருகிறோம். இவ்வாறு சலுகை விலையில் காய்கறிகள் கொடுத்து வருவது எங்களுக்கு இலாபமாகத்தான் இருக்கிறது. இந்த சலுகை விலை காய்கறிகளை உள்ளூர் மக்கள் மகிழ்ச்சியாக வாங்கி செல்கின்றனர்” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Mayiladuthurai,Nagapattinam,Tamil Nadu
March 24, 2025 4:46 PM IST
Ramzan Offer: 100 ரூபாய்ல எல்லா காய்கறியும் வாங்கிறலாமா… ஆஃபரில் காய்கறியை அள்ளிச் செல்லும் மக்கள்…

