வடக்கில் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அவற்றுக்கு மக்கள் செல்ல வேண்டுமென்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்து தரப்படுமென்றும் யாழ். மாவட்ட வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், இணைத் தலைவர்களான வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டு, புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன.இதன்போது உரையாற்றிய வடமாகாண ஆளுநர், அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படுமென பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் கூறினார்.
The post உயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 21 ஆலயங்களில் 07 விடுவிக்கப்படும் appeared first on Thinakaran.