Last Updated:
கோடை வெயிலில் இருந்து தப்பிக்க ஜூஸ் கடை நாடும் மக்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் கோடை வெயிலின் காரணத்தால் பல பகுதிகளில் கரும்பு ஜூஸ் விற்பனை அதிகரித்து உள்ளது. இதனுடன் நுங்கு விற்பனையும் ஆரம்பமாகிவிட்டது.
கோடை காலத்தில் பிரத்தியேகமாக விளையும் பல விதமான பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளன. வெள்ளரி, தர்பூசணி, கிர்ணி, மாம்பழம் என்று கோடைக்காலத்தில் அதிகமாக விளையக்கூடிய பழங்கள் மற்றும் காய்கறிகளில் வெப்பத்தைத் தணிப்பதற்கான நீர் சத்தும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் நிறைந்து இருக்கும். அதுபோல குளிர் காலத்திலேயே அறுவடை செய்யப்படும் கரும்பு, கோடை வெயிலின் தாக்கத்தை குறைப்பதில் பெருமளவில் உதவுகிறது.
வெப்பம் அதிகமான நாட்களில் எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் பத்தாது, எனவே தாகம் தீர்ப்பதற்கு தண்ணீர் தவிர இயற்கையான பானங்களை பலரும் விரும்புகின்றனர். அதில் இளநீருக்கு அடுத்து மிகவும் பிரபலமாக இருப்பது கரும்புச்சாறு. எலுமிச்சை இஞ்சி சேர்த்து செய்யப்படும் கரும்புச்சாறு ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் குடித்தாலே வெயிலின் தாகத்தில் இருந்து பொதுமக்கள் தப்பித்துக்கொள்ள முடியும்.
இதையும் வாசிக்க: கோடையை குழுமையாக்கும் கிர்ணி பழ ஜூஸ்! என்னென்ன பெனிபிட்ஸ் தெரியுமா?
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் பல பகுதிகளில் கரும்பு ஜூஸ் விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. ஒரு கிளாஸ் கரும்பு ஜூஸ் 15 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பிப்ரவரி இறுதி நாட்களில் ஆரம்பிக்கும் இந்த வியாபாரம் ஜூலை மாதம் வரை நடைபெறும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஜூஸ் வகைகளில் கரும்பு ஜூஸ் பொதுமக்களின் மத்தியில் பிரத்தியேக இடத்தை பிடித்துள்ளது. எனவே கோடை வெயிலின் உஷ்ணத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காக விழுப்புரம் நகர மக்கள் அதிக அளவில் கரும்பு ஜூஸ்களை பருகுவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள், இதனால் வியாபாரமும் சிறந்த முறையில் நடக்கிறது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அதேபோல் நுங்கு விற்பனையும் தொடங்கியுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
March 21, 2025 11:01 AM IST

