Last Updated:
கடந்த 9 ஆம் தேதி துபாயில் நடந்த இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி.
சாம்பியன் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பரிசுத் தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது.
பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், சாம்பியன் கோப்பை இறுதி போட்டிக்குள் நுழைவதற்கு முன்பு, ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி 4 போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தியதாக பாராட்டு தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த 9 ஆம் தேதி துபாயில் நடந்த இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளது.
இதை கொண்டாடும் வகையில், இந்திய அணிக்கு ரூ.58 கோடியை பிசிசிஐ பரிசாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்திய அணி வீரர்கள் மற்றும் தலைமை பயிற்சியாளருக்கு தலா 3 கோடி ரூபாயும், துணை பயிற்சியாளர்களுக்கு 50 லட்ச ரூபாயும் பரிசாக வழங்கப்படும் என்று பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா அறிவித்துள்ளார்.
ஏற்கனவே சாம்பியன் கோப்பை வென்றதன் மூலம், ரூ.19.5 கோடி பரிசுத் தொகையை ஐசிசியிடம் இருந்து இந்திய அணி பெற்றுள்ளது. இதே போல், கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை வென்ற போது ரோகித் ஷர்மா தலைமையிலான அணிக்கு பிசிசிஐ 125 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கியது.
இதையும் படிக்க: அதிருப்தி தெரிவித்த விராட் கோலி.. உடனே முடிவை மாற்றிய பிசிசிஐ.. முக்கிய விதியில் விரைவில் மாற்றம்!
தோனியின் தலைமையில் 2011ல் ஒருநாள் உலகக் கோப்பை வென்ற அணிக்கு அறிவிக்கப்பட்ட பரிசு தொகையை விட தற்போது மூன்று மடங்கு அதிகமாக பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
March 20, 2025 1:10 PM IST


