Last Updated:
Summer Business Booms| கோடை வெயில் தாக்கத்தால் வியாபாரம் களைக்கட்டுவதாக வியாபாரிகள் மகிழ்ச்சி.
இந்த கொடூர வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காலிக நிவாரணம் பெற, நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள இளநீர், நுங்கு, கரும்பு ஜூஸ், வெள்ளரிப் பிஞ்சு, தர்பூசணி, குளிர்பானம் மற்றும் ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் கடைகளுக்கு மக்கள் திரளாகச் சென்று அவற்றை வாங்கிப் பருகி தங்களது தாகத்தைத் தீர்த்துக்கொள்கின்றனர்.
நாமக்கல் பஸ் நிலையம், பூங்கா சாலை, திருச்சி சாலை, துறையூர் சாலை, மோகனூர் சாலை மற்றும் கோட்டை சாலைகளில் ஏராளமான தள்ளுவண்டி கடைகளில் கம்மங்கூழ் விற்பனையும் நடைபெற்று வருகிறது.
இவற்றில் கரும்பு ஜூஸ் கடைகளுக்கு அதிக அளவில் கூட்டம் அலைமோதுகிறது. கரும்பு ஜூஸ் விலை குறைவாக இருப்பதுடன், அதில் ஐஸ் கலந்து வழங்குவதால் ஜில்லென்று இறங்கி உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது.
ஒரு டம்ளர் கரும்பு ஜூஸ் வெறும் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால், அதிகளவு வாங்கி பருகுகின்றனர். கரும்பு ஜூஸ் மூலம் வெயிலின் தாக்கத்திலிருந்து ஓரளவு நிவாரணம் கிடைப்பதால், இந்தக் கடைகளுக்கான மக்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடை காலம் முழுவதும் இந்த கடைகள் நல்ல வியாபாரம் நடக்கும் என வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
March 20, 2025 9:42 AM IST
Summer Business Booms: மக்களை வாட்டி வதைக்கும் வெயில் குளிர்பானகடைகளில் குவியும் மக்கள்… களைக்கட்டும் வியாபாரம்…

