Last Updated:
யுஸ்வேந்திர சஹல் மற்றும் தனஸ்ரீ விவாகரத்து செய்தி பரபரப்பாகி, சஹல் ரூ. 4.75 கோடி ஜீவனாம்சம் வழங்க சம்மதித்தார்
இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக யுஸ்வேந்திர சஹல் இருந்து வருகிறார். 20 ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என பாராட்டப்படும் இவர், பலமுறை இந்திய அணியின் வெற்றியில் பங்களித்துள்ளார். இவரும் பிரபல பாடகியும் மாடலுமான தனஸ்ரீயும் 2020 டிசம்பரில் திருமணம் முடித்தனர்.
இதன் பின்னர் இருவரும் ரொமாண்டிக்கான பல புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் பரவின. இந்நிலையில் சமீபத்தில் இருவரும் பரஸ்பரம் பிரிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சஹல் தரப்பிலும், தனஸ்ரீ தரப்பிலும் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக சாஹலிடமிருந்து ஜீவனாம்ச தொகையாக ரூ. 60 கோடி பணத்தை தனஸ்ரீ வர்மா கேட்டதாக இணையத்தில் தகவல்கள் பரவின. இதுகுறித்து தனஸ்ரீயை பலரும் இணையத்தில் விமர்சித்திருந்தார்கள். இருப்பினும் இந்த தகவல்களை தனஸ்ரீயின் குடும்பத்தினர் மறுத்திறுந்தனர். ஆனால் ரூ. 4.75 கோடியை வழங்குவதற்கு யுஸ்வேந்திர சாஹல் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த தொகையில் ரூ. 2.37 கோடி ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
சாஹலும் தனஸ்ரீயும் மும்பை நீதிமன்றத்திற்கு வெளியே தனித்தனியாகக் காணப்பட்டனர். இருப்பினும், விவாகரத்துக்குப் பிறகு இருவரும் ஊடகங்களுக்கு முன்னால் மௌனம் காத்து, எதுவும் பேசாமல் அவரவர் கார்களில் கிளம்பிச் சென்றனர். ஆனால் கிரிக்கெட் வீரர் சாஹல் வார்த்தைகள் மூலம் அல்ல, தனது டி-சர்ட் மூலம் நிறைய பேசினார். சமூக ஊடகங்களில் உள்ள பயனர்கள் அதனை கேலி செய்து வருகின்றனர்.
யுஸ்வேந்திர சாஹல் தனது வழக்கறிஞருடன் நீதிமன்றத்திற்கு வந்து அடைந்தார். அப்போது, அவர் முகத்தில் முகமூடி மற்றும் சன்கிளாஸ் அணிந்திருந்தார். அவர் நீதிமன்றத்திற்குச் செல்லும்போது, அவர் அணிந்திருந்த டி-சர்ட்டின் மேல் ஒரு ஜாக்கெட் அணிந்திருந்தார். ஆனால் விவாகரத்து நடந்து, அவர் நீதிமன்றத்தில் இருந்து திரும்பி வந்தபோது, அனைவரின் கவனமும் அவரது கருப்பு டி-சர்ட்டின் மீது சென்றது. அந்த டீ – சார்ட்டில் Be Your own Sugar Daddy. அதாவது, நீங்கள் வேறு யாரையும் சார்ந்திருக்காமல், உங்கள் சொந்த நிதிக்கு ஆதரவாக மாற வேண்டும் என்பதாகும். மனைவி தனஸ்ரீக்கு ஜீவனாம்சம் தர சம்மதம் தெரிவித்த பின் அவர் இதுப்போன்ற வார்த்தை பதித்த டீ சார்ட்டை அணிந்து வந்தது தற்போது சமூக வலைதளங்களில் பேச்சு பொருளாக உள்ளது.
March 20, 2025 7:00 PM IST


