• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

குறைந்த வட்டியுடன் தனிநபர் கடனைப் பெறுவது எப்படி.. வாங்க தெரிந்துகொள்ளலாம்!

GenevaTimes by GenevaTimes
March 20, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
குறைந்த வட்டியுடன் தனிநபர் கடனைப் பெறுவது எப்படி.. வாங்க தெரிந்துகொள்ளலாம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தனிநபர் கடனை பொதுவாக வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், மூன்றாம் தரப்பு ஏஜென்சிகள், மொபைல் ஆப்கள் மூலம் உடனுக்குடன் பெற முடிகிறது. எதிர்பாராத அல்லது பெரிய செலவுகளைச் சமாளிக்க, உடனடி தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக தனிநபர் கடன்கள் ஒருவருக்குத் தேவையை உடனடியாகப் பூர்த்தி செய்கிறது. மருத்துவ சிகிச்சை, வீடு புதுப்பித்தல் அல்லது விடுமுறை நாட்கள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக தனிநபர் கடனைப் பெற முடியும். எனினும், குறைந்த வட்டியில் கடனைப் பெறுவதில் தான் சூட்சமம் அடங்கியுள்ளது. இத்தகைய குறைந்த வட்டியைக் கொண்ட தனிநபர் கடனைப் பெற கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகளைப் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

குறைந்த வட்டியுடன் தனிநபர் கடனைப் பெறுவது எப்படி?

தனிநபர் கடனைப் பெறுவது எளிதான விஷயம் தான் என்றாலும், குறைந்த வட்டி விகிதத்தில் பெறுவதற்கு சில உத்திகள் தேவை. கடன் வழங்குபவர்கள் கடனை அங்கீகரிப்பதற்கு முன் பல காரணிகளைக் கருத்தில் கொள்கிறார்கள். அதாவது, கடன் வாங்குபவரின் கிரெடிட் ஸ்கோர், கடனைத் திருப்பிச் செலுத்தும் வரலாறு, வேலை மற்றும் நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மை போன்றவற்றைக் கவனத்தில் கொள்கிறார்கள். பொதுவாக வீடு அல்லது கார் கடன்களை விட தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் அதிகமாக இருப்பதால், அவற்றைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பது முக்கியம்.

அதிக கிரெடிட் ஸ்கோரைப் பராமரித்தல்: 750 அல்லது அதற்கு மேற்பட்ட கிரெடிட் ஸ்கோர், மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெறுவதற்கான வாய்ப்புகளைக் கணிசமாக அதிகரிக்கிறது. எனவே, நல்ல கிரெடிட் ஸ்கோரைப் பராமரிக்க கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள்:

* மாதாந்திர பில்கள், மாதாந்திர தவணைகள் (EMI) ஆகியவற்றைச் சரியான நேரத்தில் செலுத்த வேண்டும்.

* கடன் பயன்பாட்டு விகிதத்தை 30% க்கும் குறைவாக வைத்திருக்க வேண்டும்.

* ஒரே நேரத்தில் பல கிரெடிட் கார்டுகள் அல்லது கடன்களுக்கு விண்ணப்பிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

* கடன் அறிக்கையைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

* எந்தவொரு எதிர்மறை தாக்கத்தையும் தவிர்க்க, இணைந்து கையொப்பமிடப்பட்ட கடன் கணக்குகள் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தப்படுவதை உறுதிசெய்வது அவசியம்.

சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துதல்: கடன் வழங்குபவர்கள் திருப்பிச் செலுத்தும் விகிதத்தை வைத்து கடன் வழங்குவது குறித்து யோசிப்பார்கள். உங்கள் கிரெடிட் கார்டு பில்களை முழுமையாகச் செலுத்துவதும், நிலுவையில் உள்ள கடன்களைச் சரியான நேரத்தில் செலுத்துவதும் நம்பகத்தன்மையை மேம்படுத்த உதவுகிறது. நல்ல திருப்பிச் செலுத்தும் வரலாறு, வங்கிகளுடன் குறைந்த வட்டி விகிதம் குறித்த பேச்சுவார்த்தையின் போது உதவியாக இருக்கும்.

வட்டி விகிதங்களை ஒப்பிடுதல் மற்றும் சலுகைகள் பற்றி அறிந்து கொள்ளுதல்: கடன் வாங்கும் போது வழங்கப்படும் முதல் சலுகையை மட்டும் எதிர்பார்க்க வேண்டாம். பல வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் தனிநபர் கடன் வட்டி விகிதங்களை ஒப்பிடுவது நல்லது. பல ஆன்லைன் தளங்கள் இதனை எளிதாக்குகின்றன. மேலும், தற்போதைய கடன் வழங்குநரைச் சரிபார்ப்பதும் அவசியம். ஏனெனில், அவர்கள் நம்பகமான வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டி விகிதங்களை வழங்கக்கூடும். தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் கடனுக்கு விண்ணப்பிப்பது சிறந்தது. ஏனெனில், இந்த நேரத்தில் தான் பல வங்கிகள் தனிநபர் கடன்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குகின்றன.

நிலையான வேலை: உங்கள் மாதாந்திர கடனைத் திருப்பிச் செலுத்தும் கடமைகளை உங்கள் வருமானத்துடன் ஒப்பிடும் வருமான விகிதத்திற்கான நிலையான கடமை (FOIR), கடன் ஒப்புதலில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு நிலையான தொழில் கடன் வழங்குபவர்களுக்கு குறைந்த ஆபத்தைக் குறிக்கிறது, இது பெரும்பாலும் உங்களுக்கு சிறந்த வட்டி விகிதத்தை வழங்க ஏதுவாக இருக்கும்.

வங்கிகள் விரும்பும் விண்ணப்பதாரர்கள்:

* குறைந்தது இரண்டு வருட வேலை வரலாறு

* தற்போதைய நிறுவனத்துடன் குறைந்தது ஒரு வருடமாவது பணியில் இருக்க வேண்டும்

* அரசாங்கம், பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது புகழ்பெற்ற நிறுவனங்களில் பணிபுரிதல்

பணியாளரின் நற்பெயர்: கடன் வழங்குபவர்கள் புகழ்பெற்ற நிறுவனங்களின் ஊழியர்களை நிதி ரீதியாக நிலையானவர்களாகக் கருதுகின்றனர். எனவே, நீங்கள் ஒரு எம்என்சி அல்லது ஒரு நன்கு அறியப்பட்ட நிறுவனத்தில் பணிபுரிந்தால், குறைந்த வட்டி விகிதத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

முன்-அங்கீகரிக்கப்பட்ட கடன் சலுகைகள்: பல வங்கிகள் தற்போதைய வாடிக்கையாளர்களுக்கு போட்டி விகிதங்களுடன் முன்-அங்கீகரிக்கப்பட்ட தனிநபர் கடன்களை வழங்குகின்றன. எனவே, இதுபோன்ற ஒன்றை நீங்களும் பெற்றால், விதிமுறைகளைக் கவனமாகச் சரிபார்ப்பது அவசியம்.

தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது தவிர்க்க வேண்டிய தவறுகள்

தனிப்பட்ட கடனுக்கு விண்ணப்பிப்பது எளிமையானதாகத் தோன்றலாம், ஆனால் சில தவறான நடவடிக்கைகள் உங்களுக்கு நிதி செலவை ஏற்படுத்தக்கூடும். அந்த வகையில், மக்கள் செய்யும் சில பொதுவான தவறுகள் மற்றும் அவற்றை எவ்வாறு தவிர்ப்பது என்பது பற்றி இங்கே பார்ப்போம்.

1. தகுதி அளவுகோல்கள்: கடன் வழங்குநர்கள் வருமானம், வயது, வேலை மற்றும் கிரெடிட் ஸ்கோரை அடிப்படையாகக் கொண்ட குறிப்பிட்ட தகுதிகளைக் கவனிக்கின்றனர். இவற்றைச் சரிபார்க்காமல் விண்ணப்பிப்பது உடனடி கடன் நிராகரிப்புக்கு வழிவகுக்கும், மேலும் இது உங்கள் கிரெடிட் ஸ்கோரைக் கூட குறைக்கலாம்.

2. மறைக்கப்பட்ட கட்டணங்கள்: வட்டி விகிதங்கள் மட்டுமே நமக்கும் வரும் செலவுகள் அல்ல. பல கடன் வழங்குநர்கள், கடனை வழங்குவதற்கென்று செயலாக்கக் கட்டணங்கள், தாமதமாக செலுத்துவதற்கான அபராதங்கள், முன்கூட்டியே செலுத்தும் கட்டணங்கள் மற்றும் முன்கூட்டியே அடைக்கும் கட்டணங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றனர். எனவே, கடன் வாங்குபவர்கள் இவற்றைக் கவனிக்க வேண்டியது அவசியம்.

3. அதிகமாகக் கடன் வாங்குதல்: உங்களுக்குத் தேவையான அளவை விட அதிகமாகக் கடன் வாங்குவது, அதிக மாதாந்திர தவணைகள் மற்றும் காலப்போக்கில் அதிக வட்டி செலுத்த வேண்டிய நிலையைக் குறிக்கிறது. கடன் வழங்குபவர்கள் ஒருவரின் கடன் வருமான விகிதத்தையும் சரிபார்க்கிறார்கள். அது மிக அதிகமாக இருந்தால், எதிர்காலக் கடன்களுடன் சிரமப்பட வேண்டியிருக்கும்.

4. தவறவிட்ட பேமெண்ட்கள்: மாதாந்திர தவணைகள் அல்லது பேமெண்ட்டுகளைத் தவிர்ப்பது அல்லது தாமதப்படுத்துவது உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பாதிப்பது மட்டுமல்லாமல் தாமதமான கட்டணங்கள் மற்றும் அதிகரித்த வட்டிக்கும் வழிவகுக்கும். மோசமான திருப்பிச் செலுத்தும் வரலாறு எதிர்காலத்தில் கடன்களைப் பெறுவதை கடினமாக்கும்.

First Published :

March 20, 2025 2:22 PM IST

Read More

Previous Post

Shubman Gill: ஆட்டத்தின் வேகம் மாறியுள்ளது.. ஒரு இன்னிங்ஸில் 300 ரன்கள் கூட அடிக்கலாம்

Next Post

சமூக ஊடகங்களில் நபிகள் நாயகத்தை அவமதித்ததாகக் கூறப்படும் அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார் – Malaysiakini

Next Post
சமூக ஊடகங்களில் நபிகள் நாயகத்தை அவமதித்ததாகக் கூறப்படும் அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார் – Malaysiakini

சமூக ஊடகங்களில் நபிகள் நாயகத்தை அவமதித்ததாகக் கூறப்படும் அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin