இது தொடர்பாக வெளியான செய்தி குறிப்பில், ‘ தமிழ்நாடு முதல்வர் தலைமையில் கடந்த 05.03.2025 அன்று தலைமைச் செயலகத்தில் நாடாளுமன்ற தொகுதிகளின் மறுசீரமைப்பு குறித்து நடைபெற்ற அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் மேற்கண்ட முடிவின்படி, சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் இன்று (19.03. 2025) புது தில்லியில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த்மானை சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சரின் கடிதத்தை ஒப்படைத்து, வருகின்ற மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள ‘ நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை’ தொடர்பாக அமைக்கப்பட்ட கூட்டு நடவடிக்கை குழுக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர். இந்த நிகழ்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மருத்துவர் கனிமொழி என்.வி. சோமு, எம்.எம் அப்துல்லா ஆகியோர் உடனருந்தனர்.

