Last Updated:
மகேந்திர சிங் தோனி ஹெலிகாப்டர் ஷாட் அடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ள மகேந்திர சிங் தோனி, தனது ஐகானிக் ஸ்டைலில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடர் வரும் 22ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைச் சந்திக்கிறது.
இதையடுத்து, 23ஆம் தேதி நடைபெறும் போட்டியில், மும்பை இந்தியஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. பரம எதிரிகளாக இருக்கும் இவர்கள் மோதும் போட்டியை ‘எல் கிளாசிகோ’ என வர்ணிக்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். இந்தப் போட்டிக்கான வலைப் பயிற்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் பதிரானா வீசிய பந்தில், ‘தல’ தோனி, தனது ஐகானிக் ஷாட்டான ஹெலிகாப்டர் ஷாட் மூலம் பந்தை பவுண்டரிக்குத் தள்ளிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை வலைதளங்களில் பரப்பி வரும் ரசிகர்கள், ‘விண்டேஜ் தல’ வந்துவிட்டதாகக் கொண்டாடி வருகின்றனர்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில், மீண்டும் தோனியின் அதிரடி ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆவலோடு காத்துள்ளார்கள். இன்று தொடங்கிய டிக்கெட் விற்பனையில், டிக்கெட் தீர்ந்து போன வேகத்தில் ரசிகர்களின் ஆர்வத்தை நாம் கணிக்கமுடிந்தது.
March 19, 2025 3:37 PM IST


