Last Updated:
Cotton Auction| நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ. 85 லட்சம் மதிப்புள்ள பருத்தி மூட்டைகள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.
நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 85 லட்சம் மதிப்புள்ள பருத்தி மூட்டைகள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. நாமக்கல் திருச்செங்கோடு ரோட்டில், நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் (என்.சி.எம்.எஸ்)செயல்பட்டு வருகிறது.
இந்த சங்கத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும். நாமக்கல், புதுச்சத்திரம், காளப்பநாயக்கன்பட்டி, காரவள்ளி, சேந்தமங்கலம், எருமப்பட்டி, வரகூர், பவித்திரம், வலையப்பட்டி, மோகனூர், பாலப்பட்டி, பரமத்தி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த பருத்தியைக் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்வார்கள். திருச்செங்கோடு, கொங்கணாபுரம், ஈரோடு, அவிநாசி, திருப்பூர், வேடசந்தூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் நேரடி ஏலத்தில் கலந்துகொண்டு பருத்தியை கொள்முதல் செய்வார்கள்.
பருத்தி ஏலத்திற்கு மொத்தம் 3,250 மூட்டை பருத்தியை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். வியாபாரிகள் நேரடி ஏலத்தில் கலந்துகொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர். ஏலத்தில், ஆர்.சி.எச் ரக பருத்தி ஒரு குவிண்டால் (100 கிலோ) ரூ. 7,289 முதல் ரூ. 7,996 வரை ஏலம் போனது. சுரபி ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ. 8,300 முதல் 9,321 வரை ஏலம் போனது. மட்ட ரக கொட்டுப்பருத்தி ஒரு குவிண்டால் 4,025 முதல் ரூ. 4,700 வரை ஏலம் போனது. மொத்தம் 3,250 மூட்டை பருத்தி ரூ. 85 லட்சம் மதிப்பில் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
March 19, 2025 7:06 PM IST

