பால்வளத்துறையை கொல்லாதீங்க
நிலைமை இவ்வாறிருக்க அதிகாரிகளும், உதவியாளர்களும் எழுதித் தருவதை கண்ணை மூடிக் கொண்டு படிப்பதால் தான் கூகுள் நிறுவனத்தின் CEO திரு. சுந்தர் பிச்சை அவர்கள் ஒரு தொழிலதிபர் என்றும், CEO என்பவர் “Chief Educational Officer” என்றும் பொது மேடையில் பேசியதைப் போல பால் விற்பனை துறையிலும், ஆவினுக்கான பால் கொள்முதலிலும் என்ன நடக்கிறது..? என்பதே தெரியாமல் பேசியிருப்பதை உணர முடிகிறது. இது பால்வளத்துறை அமைச்சராக உள்ள மூத்த அரசியல்வாதியான திரு. ராஜகண்ணப்பன் அவர்கள் அதிகாரிகள், உதவியாளர்கள் எழுதித் தருவதை அலசி ஆராயாமல் அப்படியே பேசுவது வியப்பாகவும், விசித்திரமாகவும் உள்ளது. ஒருவேளை கடந்த அதிமுக ஆட்சியில் ராஜேந்திர பாலாஜி, தற்போதைய திமுக ஆட்சியில் நாசர், மனோ தங்கராஜ் வரிசையில் ராஜகண்ணப்பன் அவர்களும் இணைந்திருப்பதை காணும் போது பாவம் பால்வளத்துறையை கொல்லாதீங்க, விட்டுடுங்க என்றே சொல்லத் தோன்றுகிறது.

