குறித்த நேரத்தில் ஓவர் வீசுவது கட்டுப்பாட்டை மீறி நடக்கிறது. கடந்த வருடம் நடந்தது விளையாட்டின் ஒரு பகுதி. கடைசி ஓவரை நாங்கள் 2-2.5 நிமிடங்கள் தாமதமாக வீசினோம். அப்போது, அதன் விளைவுகள் குறித்து எனக்குத் தெரியாது. அது துரதிர்ஷ்டவசமானது, ஆனால் இதற்கு விதிகள் இருப்பதால், அந்த செயல்முறையுடன் செல்ல வேண்டும். அடுத்த சீசனிலும் அபராதம் தொடர வேண்டுமா இல்லையா என்பது ஐபிஎல் நிர்வாகத்தினர், அதிகாரிகள் கையில் உள்ளது.

