Last Updated:
கடற்படை அதிகாரி சவுரவ் ராஜ்புட், மனைவி மஸ்கன் மற்றும் சாஹில் இணைந்து கொலை செய்யப்பட்டார். 15 நாட்களுக்கு பிறகு உடல் கண்டெடுக்கப்பட்டது. மஸ்கன் மற்றும் சாஹில் கைது செய்யப்பட்டனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், மீரட்டில், தகாத உறவில் இருந்ததைக் கண்டுபிடித்த, கடற்படை அதிகாரியான கணவரை, கொலைசெய்து, உடலை துண்டு துண்டாக வெட்டிய மனைவி கைது செய்யப்பட்டார்.
கடற்படை அதிகாரியான மீரட்டைச் சேர்ந்த சவுரவ் ராஜ்புட், பணி நிமித்தமாக லண்டன் சென்றிருந்தார். அவரது மனைவியின் பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த சவுரவ், லண்டனில் இருந்து, முன்னறிவிப்பின்றி, கடந்த 4-ஆம் தேதி மீரட்டிற்கு வந்தார். ஆனால், அவரது மனைவியான மஸ்கன், சாஹில் என்ற இளைஞருடன் தகாத உறவில் இருந்தார்.
அப்போது ஏற்பட்ட மோதலில், மஸ்கன் மற்றும் சாஹில் இணைந்து, கடற்படை அதிகாரியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி, டிரம்மிற்குள் (DRUM) அடைத்து சிமெண்ட் போட்டு பூசி விட்டு, தலைமறைவாகி விட்டனர்.
15 நாட்களுக்குப் பிறகு, வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம்பக்கத்தினர் புகார் அளித்ததன் அடிப்படையில், சவுரவின் உடலை அழுகிய நிலையில் காவலர்கள் கண்டெடுத்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர், தலைமறைவாக இருந்த மஸ்கன் மற்றும் சாஹிலை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் இருவரும் சவுரவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 19, 2025 1:19 PM IST
சர்ப்ரைஸாக லண்டனில் இருந்து திரும்பிய கணவன்.. நேரில் கண்ட காட்சி.. 15 நாட்களுக்குப் பின் தெரிந்த கொடூரம்!


