Last Updated:
தோனி இப்போதும் பினிஷிங் வேலையை சிறப்பாக செய்கிறார். கடைசியாக வந்து 6 பந்துகளில் 15 – 20 ரன்களை அதிரடியாக சேர்க்கிறார் என ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
தோனிக்கு இது தான் கடைசி சீசன் என ஒவ்வொரு சீசனிலும் தகவல் பரப்பப்படும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கர நேத்ராலயா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற கண் பார்வை திறன் பிரச்சனையை நீக்குவது தொடர்பான நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பங்கேற்றார். மருத்துவமனையின் நல்லெண்ண தூதராகவும் இந்த விழாவில் ஸ்ரீகாந்த் அறிவிக்கப்பட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிஎஸ்கே அணிக்கு அஸ்வின் திரும்பியிருப்பது பலம் என கூறினார். சேப்பாக்கத்தில் அஸ்வின் சிறப்பாக விளையாடியுள்ளார் என்றும், இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நன்றாக விளையாடும் என்றும் தெரிவித்தார். மேலும் அணியில் ரச்சின் ரவீந்திரா, ஜடேஜா உள்ளிட்டோர் நல்ல ஃபார்மில் உள்ளார் என்றும் ருதுராஜ் கேப்டனாக செயல்படும்போதும் தோனி அனைத்தையும் கவனித்துக்கொள்வார் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தோனி இப்போதும் பினிஷிங் வேலையை சிறப்பாக செய்கிறார். கடைசியாக வந்து 6 பந்துகளில் 15 – 20 ரன்களை அதிரடியாக சேர்க்கிறார். விக்கெட் கீப்பிங்கிலும், இன்றும் அவருக்கு மேலே யாரும் இல்லை. அவருக்கு இறுதிப்போட்டி இந்த ஆண்டா, 2026, 2027 என இதுவரை தெரியவில்லை என தெரிவித்தார்.
மேலும் தான் சிறுவயதில் கேட்டுப் பழகிய வார்த்தைகளே தற்போது கிரிக்கெட் வர்ணணையில் பயன்படுத்துவதாகவும் ஸ்ரீகாந்த் குறிப்பிட்டார்.
March 19, 2025 12:49 PM IST


