• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

கிரிக்கெட் உலகில் சோகம்.. போட்டிக்கு நடுவே களத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த வீரர்.. நடந்தது என்ன?

GenevaTimes by GenevaTimes
March 19, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
கிரிக்கெட் உலகில் சோகம்.. போட்டிக்கு நடுவே களத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த வீரர்.. நடந்தது என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 19, 2025 12:51 PM IST

பாகிஸ்தானைச் சேர்ந்த ஜுனைத் ஜாபர் கான், ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாடியபோது கடுமையான வெப்பநிலையால் களத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். அவருக்கு வயது 40.

News18News18
News18

மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​கிரிக்கெட் வீரர் ஒருவர் களத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த வீரர் பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட ஜுனைத் ஜாபர் கான். இவருக்கு வயது 40. பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த இவர், சனிக்கிழமை கான்கார்டியா கல்லூரி ஓவலில் ஓல்ட் கான்கார்டியன்ஸ் மற்றும் பிரின்ஸ் ஆல்ஃபிரட் ஓல்ட் கல்லூரி அணிகளுக்கு இடையிலான போட்டியில் கலந்துகொண்டு விளையாடியுள்ளார். இதில் ஓல்ட் கான்கார்டியன்ஸ் கிரிக்கெட் கிளப் அணிக்காக விளையாடியிருக்கிறார் ஜுனைத். சம்பவம் நடந்த நேரத்தில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி வானிலை மிகவும் மோசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் ரமலான் மாதம் என்பதால், ஜுனைத் நோன்பு கடைபிடித்ததாகவும் சொல்லப்படுகிறது. அதேநேரம், கிரிக்கெட் விளையாடுவதால் நாள் முழுவதும் தண்ணீர் குடித்ததாகவும் சொல்லப்படுகிறது. எனினும் கடுமையான வெயிலின் காரணமாக ஜுனைத் ஜாபர் கான் களத்தில் சுருண்டு விழுந்துள்ளார். உடனடியாக விரைந்த மருத்துவர்களுக்கு அவருக்கு சிகிச்சை அளிக்க முயன்றுள்ளனர். மருத்துவர்கள் ஜுனைத் கானுக்கு CPR செய்ய முயற்சித்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

அவரின் உயிரிழப்புக்கு கடுமையான வெப்ப நிலையே காரணம் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓல்ட் கான்கார்டியன்ஸ் கிரிக்கெட் கிளப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜுனைத் கான் ஓல்ட் கான்கார்டியன்ஸ் கிரிக்கெட் கிளப்பின் மதிப்புமிக்க உறுப்பினர் என்றும், அவர் ஓவலில் விளையாடும்போது மருத்துவ ரீதியாகப் பாதிக்கப்பட்டார்” என்றும் கூறியுள்ளது. மேலும், “மருத்துவர்களின் சிறந்த சிகிச்சைகள் அளித்த போதிலும், ஜுனைத் கான் துரதிர்ஷ்டவசமாக உயிர் பிழைக்கவில்லை. இந்தக் கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அணியினருக்கு எங்கள் இரங்கலைத் தெரிவிக்கிறோம்” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Also Read | ரூ.1,450 கோடி சொத்து.. கிரிக்கெட்டில் செய்த தவறு.. ராஜ வம்சத்தைச் சேர்ந்த நடிகர்.. யார் அவர் தெரியுமா?

பாகிஸ்தானைச் சேர்ந்த ஜுனைத் ஜாபர் கான், 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டுக்குக் குடிபெயர்ந்துள்ளார். அங்கே தொழில் செய்துவந்த நிலையில், கிளப் அணிக்காகப் பங்கேற்று விளையாடியும் வந்திருக்கிறார்.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

March 19, 2025 12:51 PM IST

Read More

Previous Post

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் | DMK MPs hold protest on the issue of delimitation, in Parliament House premises

Next Post

தேன் அடையில் கொட்டும் வருமானம்… மெழுகு பொம்மைகள் செய்து அசத்தி வரும் இயற்கை விவசாயி…

Next Post
தேன் அடையில் கொட்டும் வருமானம்… மெழுகு பொம்மைகள் செய்து அசத்தி வரும் இயற்கை விவசாயி…

தேன் அடையில் கொட்டும் வருமானம்... மெழுகு பொம்மைகள் செய்து அசத்தி வரும் இயற்கை விவசாயி...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin